வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஹீரோவின் பொண்டாட்டிக்கே அடையாளம் தெரியாமல் மாற்றிய பாலா.. நம்பி வந்தவரை வச்சி செஞ்சிட்டீங்களே பாஸ்

Director Bala: பொதுவாக பாலா படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தயக்கம் காட்டுவார்கள். காரணம் என்னவென்றால் பாலா தன்னுடைய படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அப்படியே வேறு உருவமாக அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி விடுவார். சேது, பிதாமகன் படங்களை எடுத்துக் கொண்டாலே விக்ரமின் தோற்றம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

அப்படிதான் சூர்யா, ஆர்யா, அதர்வா போன்ற நடிகர்களின் உருவமும் மொத்தமாக மாற்றிவிட்டார் பாலா. இப்போது அதேபோல் நடிகர் ஒருவர் பிரச்சனையை சந்தித்துள்ளார். பொண்டாட்டிக்கு ஹீரோவை அடையாளம் தெரியாத அளவுக்கு மொத்தமாக மாற்றி விட்டாராம் பாலா. அதாவது இப்போது வணங்கான் படத்தை பாலா எடுத்து வருகிறார்.

Also Read : பாலாவை தொடர்ந்து வெற்றிமாறனுக்கும் கம்பி நீட்டிய சூர்யா.. தெள்ளத் தெளிவாக ரோலக்ஸ் ஆடப்போகும் ஆட்டம்

இந்த படத்தில் சூர்யா விலகிய பிறகு அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் நிலையில் 20 நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிய இருக்கிறதாம். ஆனால் அருண் விஜய்யை பார்ப்பதற்கு ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி வைத்திருக்கிறாராம் பாலா.

எப்போதுமே அருண் விஜய் உடற்பயிற்சி மேற்கொண்டு உடம்பை இரும்பு போல் வைத்திருக்க கூடியவர். அதை முற்றிலுமாக மாற்றி சாதாரண உடம்புக்கு கொண்டு வந்து தொப்பை வேண்டுமென அவரை வேறு ஒரு ஆளாக மாற்றிவிட்டார். இதனால் அருண் விஜய் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறாராம்.

Also Read : அடுத்தடுத்து 5 பிரம்மாண்ட இயக்குனர்களுடன் கைகோர்த்திருக்கும் சூர்யா.. கங்குவாவை மிஞ்சுமா லோகேஷ் கூட்டணி

பொதுவாக புதிதாக நடிக்க வரும் நடிகர்கள் பாலாவின் படத்தில் வேறு தோற்றத்தில் நடித்தாலும் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அருண் விஜய் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். அதுவும் இப்போது தான் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்த சூழலில் அருண் விஜய் தேசிய விருதுக்கு ஆசைப்பட்டு தனது உருவத்தை முற்றிலுமாக மாறி இருப்பதை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்பது வணங்கான் படம் வெளியானால் தான் தெரியவரும். மேலும் இது ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பது தற்போது கொஞ்சம் நிரடலாக தான் இருக்கிறது.

Also Read : சூர்யாவின் கங்குவா படத்தின் அப்டேட்.. வைரலாகும் குரூப் புகைப்படம்

Trending News