வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வித்தியாசமான படத்தை கையிலெடுத்த பாலா.. முதல்முறையாக அதர்வாவுக்கு ஜோடியாகும் நடிகை

சினிமா திரையில் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு படங்கள் இயக்குனர்களின் சாயலும் இருக்கும். ஒரு திரைப்படத்தின் கதை அல்லது எடுக்கப்பட்டிருக்கும் விதத்தை வைத்தே இயக்குனர்களை நம்மால் கணிக்க முடியும்.

அந்த வகையில் இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமும் செயல்களும் நிறைந்திருக்கும். எதார்த்தமான கதையாகவும் இயல்பான நடிப்பில் நடிகர்களையும் இருப்பார்.

சேது பிதாமகன் ,நான் கடவுள் ,அவன் இவன், பரதேசி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஒரு வித்தியாசமான கோணத்தில் நம்மை கொண்டு செல்லும், கதையாகவே பாலாவின் திரைக்கதைகள் அமைந்திருக்கும்.

ஆனால் தற்போது பாலாவின் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக காதல் நிறைந்த திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

atharvaa-paradise
atharvaa-paradise

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் மூலமாக இந்த திரைப்படம் தயாராக போவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திரைப்படத்தின் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

நடிகர் அதர்வா திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பரதேசி திரைப்படத்தில் பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடித்து இருக்கிறார். தற்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள். அதர்வாவின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News