திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாலாவை வச்சு செய்யும் சூர்யா.. இப்படியே போனா படம் எடுத்த மாதிரிதான்

பிதாமகன், நந்தா படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஏற்கனவே இந்த இரண்டு படங்களும் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் சூர்யா மீண்டும் பாலாவுடன் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியை சுற்றிப் நடைபெற்றது. இப்படத்தில் சூர்யா மீனவனாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பாலா மற்றும் சூர்யா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து சூர்யா பாதியிலேயே சென்றுவிட்டார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதனால் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காது, பாதியிலேயே நின்றுவிட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியானது.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாலாவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சூர்யா தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்ல இருக்கிறாராம். இதனால் படப்பிடிப்பு இப்போது தொடங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாலா மீது உள்ள கோபத்தால் தான் சூர்யா இவ்வாறு செய்கிறார் என்ற பேச்சுகள் இணையத்தில் அடிபட்டு வருகிறது. ஆனால் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சூர்யா சுற்றுலா சென்று வந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Trending News