புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அய்யோ.. பாலா படமா? வேணா சாமி.. அலறி ஓடிய நடிகை

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் பாலா. விருது வாங்க ஆசைப்படும் நடிகர்-நடிகைகள் அனைவரும் முதலில் பாலா படத்தில் நடிக்க தான் விரும்புவார்கள். அப்படிப்பட்ட பாலா படத்திலேயே நடிக்க மாட்டேன் என ஒரு இளம் நடிகை தலைதெறிக்க ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாலா ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. அவரது படங்கள் வரவேற்பை பெறும் அளவுக்கு வசூலை ஈட்ட இல்லை என்பது தியேட்டர்காரர்கள் குரலாக உள்ளது. முதல் மூன்று நாட்கள் மட்டுமே பாலா படங்கள் வசூலை விடுவதாகவும் அதன்பிறகு நினைத்த அளவு படங்கள் வெற்றிக் கனியை பறிப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

அதற்கு காரணம் பாலா படங்களில் முன்னணி நடிகர்கள் யாருமே நடிக்க வில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக இருந்தது. பாலாவுக்கும் தன்னுடைய படங்களில் முன்னணி நடிகர்கள் நடிப்பதில்லை என்ற ஒரு ஆதங்கம் நீண்டகாலமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதை தீர்த்து வைக்கும் விதமாக சூர்யா அவரது படத்தில் நடிக்க ஓகே செய்துள்ளார்.

keerthy suresh
keerthy suresh

தானே தயாரிக்கும் நடிக்கும் அந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க கீர்த்தி சுரேஷிடம் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். பாலா பட நடிகைகளைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன. அடிப்படையில் அழகாக இருக்கும் நடிகைகள் யாருமே பாலா படத்தில் அழகாக இருக்க மாட்டார்கள்.

அப்படி தன்னையும் மாற்றிவிட்டால் தற்போது இருக்கும் மார்க்கெட் கூட இல்லாமல் போய்விடும் என பயந்த கீர்த்தி சுரேஷ் பாலா படத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என அடம் பிடித்து வருகிறாராம். இருந்தாலும் சம்பள விஷயத்தில் சமாதானம் செய்து விடலாம் என ஒரு கூட்டம் கிளம்பி கீர்த்தி சுரேசை பார்க்கச் சென்று விட்டதாம்.

Trending News