நாச்சியார் படத்திற்கு பிறகு அடுத்ததாக பாலா புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். மேலும் இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் இணையத்தில் வட்டமிட்டு கொண்டிருக்கின்றன.
ஆனால் அதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால் பாலா அடுத்ததாக ஒரு படம் இயக்கப் போவது மட்டும் உறுதி. அந்த படத்தில் தன்னுடைய ஆஸ்தான நடிகரான அதர்வாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம்.
அதர்வாவும் சில ஆண்டுகாலமாக பெரிய அளவு வெற்றி படம் இல்லாமல் தடுமாறி வருகிறார். மேலும் அவரது படங்களும் கவனிக்கப்படாமல் போய்விட்டது. இந்த நேரத்தில் பாலா படம் வந்தால் தனக்கு ஒரு கவனிப்பு ஏற்படும் என்பதாலேயே பாலா படத்தை ஒப்புக்கொண்டாராம்.
பாலா பெரும்பாலும் தன்னுடைய படங்களில் பெரிய அளவு பரிட்சயம் இல்லாத நடிகைகளை நடிக்க வைக்க ஆசைப்படுவார். ஆனால் இந்த முறை அப்படி இல்லையாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் பாலாவின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறுகின்றனர்.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம தேசிய விருது நாயகி கீர்த்தி சுரேஷ் தான். கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் அதுவும் குறிப்பாக தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தேவையில்லாமல் பாலா படத்தில் நடித்து மேலும் தன்னுடைய கேரியருக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்கிறாரா என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
காரணம் பாலா படங்களில் நடிகர், நடிகைகள் அழகாக இருந்ததாக சரித்திரமே கிடையாது. அப்படி இருக்கையில் அழகை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் பாலா படத்தில் நடித்தால் எப்படி பிற்காலத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆளாளுக்கு ஒன்று பேசி வருகின்றனர்.
