புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

கெட்ட வார்த்தை பேசியே கல்லாகட்டிய கருப்பு சரவணன்.. 20 லட்சத்தில் மனைவிக்கு கொடுத்த காஸ்ட்லி கிப்ட்

சின்னத்திரை தொடர்கள் மூலம் அறிமுகமான பால சரவணன் குட்டிப்புலி என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். அதன் பின்பு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங் போன்ற பல படங்களில் பாலசரவணன் நடித்துள்ளார். பெரும்பாலும் ஹீரோக்களின் நண்பனாக தான் நடித்து வருகிறார்.

மேலும் பாலா படங்களில் அதிகமாக டபுள் மீனிங் மற்றும் கெட்ட வார்த்தைகளை பேசி வருகிறார். அதைக் கேட்டு ரசிகர்கள் கைதட்டி சிரிப்பதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து குவிக்கிறது. இதனால் அவரது கல்லாப்பெட்டியும் நிரம்பி வழிகிறது. கடைசியாக அஜித்தின் துணிவு படத்தில் பால சரவணன் நடித்திருந்தார்.

Also Read : 22 கிலோ உடலை குறைத்து.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பால சரவணன்

இதில் பத்திரிக்கை நிருபர் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது மனைவி மற்றும் காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வந்தனர். அந்த வகையில் பால சரவணன் தனது மனைவிக்கு காஸ்ட்லியான கிப்ட் கொடுத்துள்ளார்.

அதாவது கிட்டதட்ட 20 லட்சம் மதிப்புள்ள Hyundai Creta காரை தனது மனைவி ஹேமாவுக்கு பால சரவணன் காதலர் தின பரிசாக கொடுத்துள்ளார். இதை ஹேமா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு வாழ்க்கையில் நாம் நினைப்பதை விட பல ஆச்சரியமான விஷயங்கள் நிறைந்திருப்பதாக கூறியுள்ளார்.

Also Read : ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய அஜித்.. உலகளவில் ஒரே வாரத்தில் துணிவு செய்த சாதனை

மேலும் பால சரவணன் சின்னத்திரையில் இருந்த வந்து இருந்தாலும் வெள்ளித்திரையில் அவருக்கு இப்போது நிறைய பட வாய்ப்பு கிடைப்பதால் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார். அதனால் தான் இந்த காதலர் தினத்தில் தனது மனைவிக்கு மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளார்.

Bala-Saravanan-Cinemapettai

Also Read : 27 நாடுகளில் 24 மணி நேரத்தில் துணிவு செய்த சாதனை.. முதல் முறையாக இந்தியளவில் மிரட்டி விட்ட அஜித்

Trending News