வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உன்ன ஹீரோயினா போட்டதுக்கு என்ன செருப்பால அடிக்கணும்.. கடுப்பான பாலா, கண்ணீர் விட்ட நடிகை

தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய வசூல் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தனித்துவத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ள இயக்குனர்தான் பாலா.

தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர். அதுமட்டுமில்லாமல் அன்று வரை தமிழ் சினிமாவில் ராசியில்லாத நடிகர் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட விக்ரமுக்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அவரது வாழ்க்கையை திசை மாற்றியவர்.

அதேபோல் அந்த மாதிரி படங்களில் நடித்த நடிகை அபிதா என்பவரை முதன்முதலாக ஒரு ஹோம்லி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இளம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கொடுத்ததும் பாலா தான்.

bala-cinemapettai-01
bala-cinemapettai-01

இந்நிலையில் அபிதாவை பாலா பல பேர் முன்னிலையில் சேது பட சூட்டிங் ஸ்பாட்டில் திட்டியதால் மனமுடைந்து அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என தாயாரிடம் புலம்பியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அபிதா.

சினிமாவில் மார்க்கெட் இல்லை என்றாலும் திருமதி செல்வம் சீரியல் மூலம் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியவர் அபிதா. அதன் பிறகு சில சீரியல்களில் நடித்தவர் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

sethu-movie-abitha-cinemapettai
sethu-movie-abitha-cinemapettai

சேது படத்தில் பரதநாட்டியம் ஆட வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. அப்போது தனக்கு சுத்தமாக நடனம் வரவில்லை எனவும், இதனால் பல டேக்குகள் சென்றதால் கடுப்பான பாலா, உன்னை ஹீரோயினா போட்டதற்கு என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி அனைவர் முன்னிலையிலும் கத்தி திட்டி விட்டாராம்.

அதன் பிறகு அடுத்த நாளே பாலா, அபிதாவிடம் சென்று உன்னுடைய நல்லதுக்கு தான் திட்டினேன் எனக் கூறி சமாதானம் ஆகிவிட்டாராம். பாலா படங்களில் நடிகர், நடிகைகள் திட்டு வாங்குவது ஒன்றும் புதிதல்ல.

Trending News