வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வணங்கான் சூர்யா போனதும் பாலா கூப்பிட்ட நடிகர்.. மன உளைச்சலில் மட்டுமல்ல பண உளைச்சலால் எஸ்கேப்பான ஹீரோ

Director Bala and Surya: இயக்குனர் பாலாவிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி அவரைக் கண்டால் தெறித்து ஓடும் அளவிற்கு கொடூரம் பண்ணக்கூடியவராக தான் இருக்கிறார். அதாவது புகழும் விருதும் கிடைக்க வேண்டுமென்றால் எந்த எல்லைக்கும் போக தயார் என்பதற்கு ஏற்ப தான் இவருடைய இயக்குனர் பாணி இருக்கும்.

அதனாலேயே இவரிடம் எந்த சகவாசமும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முன்னணி ஹீரோக்கள் ஒதுங்குவார்கள்.
ஒரு காலத்தில் இவருடைய இயக்கத்தில் நடித்து விட்டால் அந்த ஹீரோக்களின் கேரியர் பிரகாசமாகிவிடும் என்று இருந்தது. ஆனால் இப்பொழுது அதையெல்லாம் விட நிம்மதியும் மரியாதையும் தான் வேணும் என்று பலர் நினைக்கிறார்கள்.

அதாவது ஆரம்பத்தில் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த பொழுது பழைய சூர்யா என்ற நினைப்பில் கொஞ்சம் ஓவர் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டார் பாலா. ஆனால் இதையெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்பதற்கு ஏற்ப சூர்யா, பாலாவிற்கும் இப்படத்திற்கும் பெரிய கூடு கும்பிடு போட்டு விலகி விட்டார்.

Also read: பாலாவின் 2 படங்களில் நடித்த ஒரே ஹீரோயின்.. ஹீரோ மீது இருந்த கிரஸ்ஸால் சகிச்சிக்கிட்ட பால் டப்பா

அதன் பின் இந்த கதைக்கு விக்ரம் தான் சரிப்பட்டு வருவார் என்று பாலா அவரை தேடி அலைந்தார். ஆனால் விக்ரமோ இவர் கண்ணில் மட்டும் சிக்கி விடக்கூடாது என்று எஸ்கேப் ஆகினார். அதற்கு காரணம் அந்த நேரத்தில் மன உளைச்சலிலும், நிதி நெருக்கடியிலும் ரொம்பவே தவித்து வந்தார்.

எதற்காக என்றால் விக்ரமனின் மகன் துருவ் விக்ரமை வைத்து ஆதித்ய வர்மா என்ற ஒரு படத்தை பாலா எடுத்தார். ஆனால் அந்த படம் தான் மொத்த கேரியரையும் சொதப்பிவிட்டது என்பதற்கு ஏற்ப மோசமான விமர்சனத்தை வாங்கி கொடுத்தது. அத்துடன் துருவ நட்சத்திரம் படம் பண நெருக்கடியால் இருந்ததால் விக்ரமுக்கு இப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது.

இந்த சூழலில் பாலாவிடம் சிக்கினால் நொந்து நூடில்ஸ் ஆகி விடுவோம் என்ற காரணத்தினால் வேண்டாவே வேண்டாம் என்று எஸ்கேப் ஆகிவிட்டார். அதன் பின்னர் தான் வணங்கான் படத்தில் அருண் விஜய் கமிட் ஆகி நடித்து தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிந்திருக்கிறது. இப்பொழுது இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கண்டிப்பாக இப்படத்தின் வெற்றி அனைவரையும் பேச வைக்கும் என்பது நிச்சயம்.

Also read: அப்ப நிஜமாவே பாலா சைக்கோ தானா.? புது பஞ்சாயத்தை கூட்டிய தாரை தப்பட்டை நடிகர்

Trending News