புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

உயிரை பணையம் வைத்து நடிக்க வைக்கும் பாலா.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

பிரபல இயக்குனர் படத்தில் நடிகர், நடிகைகள் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். இதற்கு காரணம் அவருடைய அணுகுமுறை தான். அதாவது இயக்குனர் பாலா நடிகர், நடிகைகளை துன்புறுத்தி தான் நடிக்க வைப்பார் என்று பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். இதனால்தான் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் சிலர் மறுத்து விடுகிறார்கள்.

இவ்வாறு நடிகர்கள் உயிரை பணயம் வைத்து நடிக்க வைக்க பாலா கூறிய காரணம்தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவருடைய பெரும்பான்மையான படங்களில் நடிகர், நடிகைகள் அகோரமாக தான் இருப்பார்கள். சில சமயங்களில் மிகக் கடுமையான வார்த்தைகளாலும் பேசி விடுவார்.

Also Read : பாலாவின் வகையறாவையே வச்சு செய்யும் சூர்யா.. வணங்கான் படத்திற்கு பிறகு குளறுபடியான அடுத்த படம்

இப்போது கூட வணங்கான் படத்தில் சூர்யா, பாலா இடையே ஏற்பட்ட சண்டைனால்தான் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார். இவ்வாறு ஒவ்வொரு நடிகர்களுடனும் பாலாவுக்கு தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பாலா விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது என்னுடைய படத்தில் நடிகர், நடிகைகளை கொடுமைப்படுத்துவது உண்மை தான். அதற்கு காரணம் அவர்களை அர்ப்பணிப்புடன் நடிக்க வைக்க வேண்டும் என்பது தான் பின்னால் இருக்கிறது. அவ்வாறு அவர்கள் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தால் தான் நூறு ஆண்டுகளுக்கு மேலும் பேசப்படுவார்கள்.

Also Read : சூர்யா, அதர்வாவின் இடத்தை தட்டிப்பறித்த பாலாவின் அடுத்த ஹீரோ.. விறுவிறுப்பாக தொடங்கும் வணங்கான்

இப்போது மாஸ் ஹீரோ, பெரிய ஹீரோ அப்படி வந்துட்டு போறவங்க எல்லாம் கொஞ்ச நாளில் மக்கள் மனதில் காணாமல் போய்விடுவார்கள். ஆகையால் யார் என்ன சொன்னாலும் நான் நடிகர்களிடம் இப்படி தான் வேலை வாங்குவேன்.

மேலும் இதற்கான பலனை அவர்கள் இப்போது அனுபவிக்கவில்லை என்றாலும் பல ஆண்டுகள் பின்பு அவர்களுக்கு அது தெரியும் என்பதை ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் பாலா கூறியுள்ளார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் அடிப்பது பின்னால் பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும் என்ற காரணம் இருப்பது போல இப்போது பாலா கண்டிப்பது அவர்கள் பெரிய நடிகர்களாக வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியுள்ளார்.

Also Read : சேது படத்தில் முதல் சாய்ஸ் விக்ரம் இல்லையாம்.. பாலாவை டீலில் விட்ட நடிகர்

Trending News