ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

பாலா சொன்ன பொய்யை குழந்தை கூட நம்பாது.. வணங்கானில் மறைக்கப்பட்ட பல உண்மைகள்

பாலாவின் 25 வருட கால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வணங்கான் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விழா எடுத்தனர். சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் அந்த நிகழ்ச்சி நன்றாக அமைந்தது. பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் சிவகுமார் குடும்பத்துடன் வந்து சிறப்பித்தார். முன்னர் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் சண்டை அதனால் இந்த நிகழ்ச்சிக்கு சூர்யா வரமாட்டார் என பேசி வந்தார்கள். ஆனால் சூர்யா இந்த விழாவில் கலந்து கொண்டார்.

விஷால், ஆர்யா, அதர்வா, சசிகுமார் போன்ற ஹீரோக்கள் வரவில்லை. இந்த ஹீரோக்கள் அனைவரும் பாலாவிற்கு கடமைப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் வராதது பாலாவிற்கு வருத்தம் தான், ஆனால் அதை எல்லாம் காட்டிக் கொள்ளாமல் மேடையில் நல்லது, கெட்டதை பகிர்ந்து கொண்டார் பாலா.

வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் நடித்து வந்தார். ஒரு மாதம் சூட்டிங் நடைபெற்ற பின்னர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சூர்யா மற்றும் பாலா இருவரும் மோதிக்கொண்டனர் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது.

சமீபத்தில் பாலா கொடுத்த பேட்டியில், சூர்யா நடிக்கும் பொழுது அந்த படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்றது. கன்னியாகுமரியில் Crowd ஜாஸ்தியாக இருந்ததால், சூர்யாவை வைத்து படம் பண்ண முடியவில்லை. ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் தான் இந்த படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போனது என்ன பாலா கூறினார்.

பாலா சொன்னது முற்றிலும் பொய். இதே சூர்யாவை வைத்து ஆர்.ஜே பாலாஜி படம் எடுத்து வருகிறார். இந்த படம் கோயம்புத்தூரில் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. பாலாஜிக்கு இல்லாத கஷ்டமா பாலாவிற்கு வந்துள்ளது என பத்திரிக்கையாளர்கள் அவரை விளாசி வருகிறார்கள்.

Trending News