சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரஜினிகாந்த், லதா ஜோடியும் விவாகரத்து வரை சென்றது.. பஞ்சாயத்து செய்து முடித்தது இவர்தான்?

தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் அனைவரும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷை விவாகரத்து செய்து பிரிய இருப்பது ரஜினியின் ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கஸ்தூரி, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பிரபலங்கள் பலரும் தங்கள் வேதனையை மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தயாரிப்பாளர் கே ராஜன், தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு குறித்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

அதாவது அவர், அவர்கள் இருவரின் விவாகரத்து அறிவிப்பைக் கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். 18 ஆண்டுகால வாழ்க்கையில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லையா. கணவன், மனைவி என்றால் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம்தான் அதற்காக விவாகரத்து வரை செல்வது முறையல்ல.

இவர்களைப் போலவே பல வருடங்களுக்கு முன்பு ரஜினியும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்தார்கள். ஆனால் அவர்கள் இருவரிடமும் இயக்குனர் பாலச்சந்தர் உட்பட நண்பர்கள் அனைவரும் பேசி அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர். இன்று ரஜினி தன் மனைவியுடன் சுமூகமாக வாழ்ந்து வருகிறார்.

அதேபோன்று தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த வயதில் குழந்தைகள் மனது புண்பட்டால் அவர்களின் எதிர்கால வாழ்வு நன்றாக இருக்காது. இதை மனதில் வைத்து தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இணைந்து வாழ வேண்டும்.

மேலும் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதை ரஜினியின் ரசிகர்கள் உட்பட யாரும் விரும்ப மாட்டார்கள். இதனால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

Trending News