புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தர் இறக்கிவிட்ட 2 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கர் விருது வாங்கி சாதனை

80, 90களில் இளையராஜா தமிழ் சினிமாவில் தன் ஆதிக்கத்தை முழுவதுமாக செலுத்திக் கொண்டிருந்தார். அவர் இல்லாமல் எந்த திரைப்படமும் வெளிவராது என்ற நிலைமையும் அப்போது இருந்தது. அந்த அளவுக்கு இளையராஜாவின் கொடி தான் பறந்து கொண்டிருந்தது. அப்படியே புது இசையமைப்பாளர்கள் வந்தாலும் இவர் அவர்களை சினிமாவில் நீடிக்கவும் விடமாட்டார்.

ஏனென்றால் பல முன்னணி இயக்குனர்களுக்கும் இவர்தான் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தார். ஆனால் அதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் பாலச்சந்தர் இரண்டு இசையமைப்பாளர்களை அப்போது அறிமுகப்படுத்தினார். அதாவது பாலச்சந்தரின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு முறை அவரிடம் தன் ஆணவத்தை காட்டி இருக்கிறார்.

Also read: ஆயிரக்கணக்கான பாடல்களில் இது தனித்து நிற்கும்.. மாத்தி மாத்தி புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன், இளையராஜா

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டையும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் பாலச்சந்தர், இளையராஜாவை விட்டு ஒதுங்கி புது இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்திருக்கிறார். அப்படி வாய்ப்பு பெற்ற நபர் தான் இசை புயல் ஏ ஆர் ரகுமான். பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தில் இவர் இளையராஜாவுக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டார்.

அங்கு ஆரம்பித்த இசை புயலின் பயணம் இன்று ஆஸ்கர் வரை சென்றுள்ளது. அதேபோன்று பாலச்சந்தரின் அழகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இசையமைப்பாளர் கே எம் கீரவாணி. தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் இசையமைத்து வரும் இவரை தமிழில் மரகதமணி என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.

Also read: 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிய ஒரே படம்.. இப்போது அதிக அளவில் தேடப்பட்டு வரும் படம்

அழகன் திரைப்படத்தை தொடர்ந்து வானமே எல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இவர் இப்போது ஆஸ்கர் விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த வருடம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு தற்போது ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பாடலின் இசையமைப்பாளரான கீரவாணி தற்போது ஆஸ்கரை வென்று உலக அளவில் கவனம் பெற்றுள்ளார். இப்படி இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருவரும் மிகப்பெரும் புகழை அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் பாலச்சந்தர் இப்போது இல்லை என்றாலும் அவர் எதை நினைத்து இவர்களை அறிமுகப்படுத்தினாரோ அது நடந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: 2023 ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்.. நினைத்ததை முடித்துக் காட்டிய ராஜமவுலி

Trending News