Rajini-Kamal: ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பவான்களை சினிமாவில் வளர்த்து விட்ட பெருமை பாலச்சந்தருக்கு உண்டு. தனக்கென ஒரு பாணியில் வித்தியாசமான பல வெற்றி படங்களை கொடுத்த இவர் ரஜினியை ஒதுக்கிவிட்டு கமலை மட்டும் வளர்த்து விட்ட ஒரு சம்பவமும் இருக்கிறது.
அதாவது கமலை வைத்து பல படங்களை இயக்கி வெற்றி கண்ட பாலச்சந்தர் அவரை வைத்து ஒரு ஹிந்தி படமும் இயக்கியிருந்தார். பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட மரோ சரித்ரா படத்தின் ரீமேக் ஹிந்தியில் ஏக் துஜே கே லியே என்ற பெயரில் வெளியானது.
அதைத்தொடர்ந்து இன்னும் சில படங்களையும் அவர் கமலை வைத்து இயக்கியிருந்தார். அதை பார்த்து ரஜினிக்கும் ஒரு ஆசை வந்திருக்கிறது. இத்தனைக்கும் அவருக்கு ஹிந்தி நன்றாக பேச தெரியும். ஆனாலும் பாலச்சந்தர் ரஜினியை ஹிந்தியில் நடிக்க வைக்க விருப்பம் தெரிவிக்கவில்லையாம்.
இருப்பினும் ரஜினி சில ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய நண்பர் அமிதாப் பச்சன் தான். அவர் தான் ரஜினியை கைப்பிடித்து அழைத்து வந்து ஹிந்தி படங்களில் நடிக்க வைத்திருக்கிறார்.
அப்படி ரஜினி ஹிந்தியில் அறிமுகமான முதல் படமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. தமிழில் சட்டம் ஒரு இருட்டறை என்ற பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக் தான் அப்படம். அதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சனும் நடித்திருப்பார். அப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் மேலும் சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவ்வாறாக பாலச்சந்தர் ஒதுக்கினாலும் அமிதாப்பச்சன் மூலம் சூப்பர் ஸ்டார் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் பாலச்சந்தர் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்தது ஏன் என்று தான் தெரியவில்லை.
Also read: காகம் பருந்தாக முடியாது.. ரஜினி சொன்ன குட்டி கதை, வெடித்த அடுத்த சர்ச்சை