செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இளையராஜாவின் ஆணவத்தை அடக்கிய பாலச்சந்தர்.. பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய படம்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் தான் இளையராஜா. இவருடைய இசை இல்லாத படங்களே அப்போது வெளிவந்தது கிடையாது. அது மட்டுமின்றி தமிழ் சினிமாவின் இன்றியமையாத ஒரு இசையமைப்பாளராகவும் இவர் வலம் வந்தார். இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை தான்.

அதன் பிறகு அவருக்கு ஒரு சரியான போட்டியாக வந்தவர்தான் ஏ ஆர் ரகுமான். இவருடைய வரவுக்குப் பிறகு இளையராஜாவுக்கு மவுசு வெகுவாகவே குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் அவர் தலைகணத்துடன் ஆடிய ஆட்டம் தான். அதுதான் அவருக்கான போட்டியை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம்.

Also read: வைரமுத்துவின் வரிகளால் விதவையான பிரபல பாடகி.. இன்று வரை மனம் நொந்துபோன சம்பவம்

அதாவது இளையராஜாவுக்கும் பாலச்சந்தருக்கும் ஒரு மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது பாலச்சந்தரின் தயாரிப்பில் மணிரத்தினம் ரோஜா திரைப்படத்தை இயக்க இருந்தார். அப்படத்திற்கு இளையராஜா தவிர வேறு யாராவது இசையமைக்க வேண்டும் என்று பாலச்சந்தர் முடிவெடுத்து இருந்தார். பொதுவாக மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாவற்றிற்குமே இளையராஜா தான் இசையமைப்பது வழக்கம்.

ஆனால் பாலச்சந்தருக்கும் அவருக்கும் இந்த பிரச்சனையின் காரணமாக அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து இருக்கிறார். இளையராஜா இல்லாமல் அவரால் படம் எடுக்கவும் முடியவில்லை. பாலச்சந்தரின் வார்த்தையையும் அவரால் மீற முடியவில்லை. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அனைத்து இசையமைப்பாளரிடமும் வேலை செய்து வந்த திலீப் என்ற இளைஞரை மணிரத்னம் சந்தித்தார்.

Also read: இளையராஜாவை வெறுத்த ரஜினி.. 28 வருடங்களாக ஒதுக்கி வைத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!

அவருடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து பாலச்சந்தரிடம் அவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். எப்போதுமே பாலச்சந்தர் ஒருவரை பார்த்தால் அவருடைய திறமை என்ன என்பதை உடனே கணக்கிட்டு விடுவார். அப்படித்தான் அவர் திலீப் என்ற அந்த நபரை பார்த்து இந்த இளைஞன் பிற்காலத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக வருவான் என்று கூறி அந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அந்த திலீப் என்பவர் ஏ ஆர் ரகுமான் தான் என்பது அனைவருமே தெரிந்த விஷயம் தான். இப்படித்தான் ஏ ஆர் ரகுமான் தன் பயணத்தை ஆரம்பித்தார்.

அது மட்டுமல்லாமல் இதில் மற்றொரு சம்பவமும் நடந்திருக்கிறது. அதாவது வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் அப்போது ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது. மேலும் இளையராஜா இசையமைக்கும் படங்களில் இவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் ரோஜா படம் இவருக்கு ஒரு புது வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. அதன்பிறகு படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவ்வாறு ரோஜா திரைப்படம் பல ஜாம்பவான்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இது அத்தனையும் இளையராஜாவின் ஆணவத்தால் மட்டுமே நடந்தது என்பதை நாம் மறுக்க இயலாது.

Also read: முதலும் கடைசியுமாக சொந்த குரலில் ரஜினி பாடிய ஒரே பாடல்.. இளையராஜாவும், கங்கை அமரனும் போட்ட பெரும் சண்டை

Trending News