திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

22-வது பிறந்தநாள் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி.. நைட் பார்ட்டியில் நெருக்கமாக போஸ் கொடுத்த பாலாஜி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கவர்ச்சியான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களை கிரங்கடித்து வந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அங்கு தான் பாலாஜி முருகதாஸ் உடன் ஷிவானி கிசுகிசுக்கப்பட்டார். மேலும் பிக் பாஸ் வீட்டினுள் வந்த ஷிவானி அம்மாவும் பாலா உடன் பேசியதால் கடுமையாக கண்டித்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியோடு ஷிவானி, பாலாஜி முருகதாஸ் ரிலேஷன்ஷிப் முடிந்துவிடும் என ரசிகர்கள் நினைத்தனர்.

Also Read : உடல் மெலிந்து கிக்கான புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் ஷிவானி.. கிறங்கி போன இளசுகள்

ஆனால் அதற்கு நேர் எதிராக தற்போது வரை இது தொடர்ந்து வருகிறது. அதாவது பாலாஜி முருகதாஸ் அடிக்கடி ஷிவானி உடன் எடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஷிவானி தன்னுடைய 22 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார்.

மேலும் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை ஷிவானி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் அதில் தனிமையாக அவர் மட்டும் இருக்கும் புகைப்படம் மட்டும் தான் இருந்தது. ஆனால் பாலாஜி முருகதாஸ் ஷிவானியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உள்ளார்.

Also Read : விறுவிறுப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 ஆடிஷன்.. யாரு கலந்துக்குறாங்க, எப்ப துவங்கப்படுகிறது தெரியுமா.?

நைட் பார்ட்டியில் நெருக்கமாக போஸ் கொடுத்த பாலாஜி அந்த புகைப்படத்தை வெளியிட்டு ஷிவானிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதனால் இப்போது வரை ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்து வருகிறார்கள். மேலும் விரைவில் இருவரும் நல்ல செய்தி சொல்லுங்கள் என ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

balaji-shivani

Also Read : பிக் பாஸ் விக்ரமின் முகத்திரையை கிழித்த வழக்கறிஞர்.. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய கொடூரம்.!

Trending News