திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரம்யா பாண்டியனுக்கு பவுன்சராக மாறிய பிக்பாஸ் பிரபலம்.. கூட்ட நெரிசலில் நெஞ்சில் தாங்கி பிடித்த பாலாஜியின் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிநாள் வரை இருந்து சிங்கப் பெண் என்ற அடையாளத்துடன் வெளியேறியவர் தான் ரம்யா பாண்டியன்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சூர்யா தயாரித்து வரும் படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அத்துடன் பல கடை திறப்பு விழாக்கள், ஸ்கூல் காலேஜ் பங்க்ஷன் என சிறப்பு விருந்தினர் ஆகவும் ரம்யா பாண்டியனை அழைத்து வருகின்றனர்.

அப்போதெல்லாம் மேளதாளத்துடன் தடபுடலான வரவேற்பு ரம்யா பாண்டியனுக்கு கிடைத்து வருகிறது. ரசிகர்களும் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

balaji-ramya
balaji-ramya

இந்நிலையில் சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரம்யா பாண்டியனும், பாலாஜியும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.

balaji-ramya-1
balaji-ramya-1

அப்போது கடல் அலை போல் சூழ்ந்த ரசிகர் கூட்டத்தால், தள்ளுமுள்ளுவில் சிக்கி கொண்ட ரம்யா பாண்டியனை தோளோடு நெஞ்சில்  சாய்த்தபடி காப்பாற்றியுள்ளார் பாலாஜி.

ramya-balaji-video
ramya-balaji-video

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைவைத்து ரம்யா பாண்டியனையும் பாலாஜியும், நெட்டிசன்கள்  தாறுமாறாக  மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

Trending News