செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தனுசை கழட்டிவிட்ட பிரபல இயக்குனர்.. எனக்கு ஒருபோதும் அவர் வேணாம்

தமிழில் தனுஷை வைத்து மாரி, மாரி-2 ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தனுஷை வைத்து மீண்டும் ஒரு புதிய படம் இயக்குவதாக இருந்தது. ஆனால், பிஸி ஷெட்யூல்ட் காரணமாக பாலாஜி மோகன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் தள்ளிப்போனது.

எனவே நேரத்தை வீணாக்காமல் இந்த இடைப்பட்ட நேரத்தில் சித்தார்த் நடிப்பில் ஒரு படத்தை பாலாஜி மோகன் இயக்குகிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு முன் பாலாஜி மோகனின் முதல் படமான காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சித்தார்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. விரைவில் படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

siddharth-cinemapettai
siddharth-cinemapettai

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும், சேகர் கம்முலா இயக்கத்தில் பான் – இந்தியன் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இவை தவிர ராட்சசன் ராம் குமார், மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News