திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இளம் நடிகைகளுடன் அப்படி இப்படி சீன் வேண்டும்.. அடம்பிடிக்கும் 61 வயது நடிகர்

இப்போது இருக்கும் சினிமா நடிகர்கள் பெரும்பாலும் ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்து எப்படியாவது சம்பாதித்து செட்டிலாகிவிட வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கின்றனர். அப்படி மாறி மாறி நடிக்கும்போது ஒரு படத்தில் கைவிட்டாலும் இன்னொரு படம் கை கொடுக்கும் அதை வைத்து கொஞ்ச காலம் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதுதான்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். அவர்களது படங்கள் வெற்றியடைந்தால் கூட பரவாயில்லை. ஆனால் தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும் சொந்த காசை செலவு செய்தாவது ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நம்ம பாலகிருஷ்ணா. பிரபல தெலுங்கு நடிகரான இவர் ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவின் மாஸ் டாப் ஸ்டாராக வலம் வந்தார். அரசியல் சினிமா என இரண்டிலும் கலக்கி வரும் பாலகிருஷ்ணா நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் எதுவுமே பெரிய அளவு வெற்றியை குவிக்கவில்லை. பாலகிருஷ்ணா ரசிகர்களை வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்தால் கண்டிப்பாக படங்கள் வெற்றி பெறும் என அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

shruthi-haasan
shruthi-haasan

ஆனால் அவரோ இன்னமும் நான் இளம் நடிகராக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நடிகைகளுடன் நெருங்கி ரொமான்ஸ் காட்சிகள் வைத்து விடுங்கள் என கட்டளையிடுகிறார் ஆம். அப்போது தான் தன்னை இளம் நடிகராக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என அவர்களை பிரேமா செய்து விடுகிறாராம்.

அந்த வகையில் அடுத்ததாக தன்னுடைய படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் அதிகமாக வைக்குமாறு இயக்குனர்களுக்கு கட்டளையிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணா. இதை கேள்விப்பட்ட ஸ்ருதி ஹாஸன் உஷாராக ரொமான்ஸ் காட்சிகளில் ஒரு கட்டத்திற்கு மேல் நெருங்கி நடிக்க மாட்டேன் எனக் கட்டளையிட்டு தான் அந்த படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டுள்ளாராம்.

Trending News