வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அல்லு அர்ஜூனுக்கு 6 மாதம் கெடு கொடுத்த பாலகிருஷ்ணா.. புஷ்பா-2 ரிலீஸ் நேரத்தில் இது வேறயா?

தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் தாகு மஹாராஜ் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய பாபி கோலி இயக்கியுள்ளார். இதில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீ நாத், பிரக்யா, சாந்தினி சவுத்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமன் இசைமைத்துள்ளர். இப்படம் வரும் பொங்கலுக்கு ராம் சரணின் கேம் சேஞ்சருடன் ரிலீஸாகவுள்ளது.

அடுத்து, அகண்டா 2 படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பதுடன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி, அன்ஸ்டாப்பிள் என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் நிலையில் இதில், பிரபல சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்று கருத்துகள் தெரிப்பது, தங்கள் புதிய படங்கள் பற்றி புதிய தகவல்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவற்றை கூறி வருகின்றனர்.

இது படத்துக்கான புரமோஷன் என்றாலும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பதால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா-2 திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

பாலய்யாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜூன்!

இப்படத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான டீசரும் குறைந்த நேரத்தில் இமாலய சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், பாலய்யா தொகுத்து வழங்கி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்ச்சியான அன்ஸ்டாப்பிள் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் ஸ்பெசல் கெஸ்டாக பங்கேற்றார்.

அப்போது “அனிமல் பட ஹீரோ ரன்பீர் கபூரில் போட்டோவை காட்டி இவரைப் பற்றி என்ன நினைகிறீர்கள்” என்று பாலய்யா கேட்டார். அதற்கு அவர், “இவர் என் பேவரெட் நடிகர். பாலிவுட்டில் உள்ள மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்த தலைமுறையில் ஆச்சயர்யப்படுத்தும் நடிகர்களில் ஒருவர். நான் அவரை ரசிக்கிறேன்” என்று கூறினார்.

உடனே பாலய்யா, “நீங்கள் இருவரும் இணைந்து ஒரு மல்டி ஸ்டார் படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அதற்கு அல்லு அர்ஜூன். “அது சூப்பராக இருக்கும்” என்று கூறினார்.

இதையே பாலய்யா ஆடியன்ஸை பார்த்து “இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கப் போகிறார்கள்” என்று கூறியதுடன், “உங்களுக்கு ஆறு மாதம் டைம் தருகிறேன். யாரும் உங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதவில்லை என்றால் நானே உங்களுக்கு கதை எழுதுகிறேன்” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பாலய்யா தான் ஒரு சீனியர் நடிகராக இருந்தாலும் இளம் நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும், அதற்காக தானே கதை எழுவதுவதாக பெருந்தன்மையுடன் கூறியுள்ளது அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.

Trending News