Rajini: தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகராக இருக்கும் பாலையா எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர். பொது மேடைகளில் அவர் செய்யும் பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் அதிர்வை ஏற்படுத்தும்.
அது மட்டும் இன்றி அவருடைய படங்களை கூட இப்போது நெட்டிசன்கள் மீம்ஸ் மெட்டீரியல் ஆக மாற்றியுள்ளனர். அதிலும் அவர் ஆடும் டான்ஸ் எப்போதுமே ட்ரோல் செய்யப்படும்.
ஆனால் தற்போது அவர் ஆடிய நடனம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் டக்கு மகாராஜ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது.
ரஜினி அளவுக்கு பக்குவம் இல்லாத பாலையா
அப்படத்தில் இருந்து வெளிவந்துள்ள பாடலில் அவர் ஆடி இருக்கும் நடனம் மகளிர் சங்கம் வரை கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஹீரோயினை அவர் கண்டபடி அடிப்பது போல் டான்ஸ் மூவ்மெண்ட் இருக்கிறது.
இதை பார்க்கும் போது பாடல் காட்சியா இல்லை சண்டைக் காட்சியா என்றுதான் தோன்றும். இதற்கு மகளிர் அமைப்புகள் தற்போது ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் 64 வயசில் இவருக்கு இதெல்லாம் தேவையா. ரஜினி கூட இப்போதெல்லாம் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அந்தப் பக்குவம் பாலகிருஷ்ணாவுக்கு இல்லையே என்ற கண்டன குரல்களும் எழுந்துள்ளது. இருப்பினும் நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன் என்ற ரீதியில் இருக்கிறார் பாலையா.