திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மேடையில் பாடிய பாலகிருஷ்ணா..வச்சு செய்யும் நெட்டிசன்கள்.

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரும், முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்த இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, “ஏ.ஆர்.ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். ஆனால், அவர் யார் என்றே எனக்கு தெரியாது.

பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம்.மேலும் எந்தவொரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது” என கூறியிருந்தார்.

balakrishna-cinemapettai
balakrishna-cinemapettai

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்தது.

வீடியோ பார்க்க லிங்கை கிளிக் செய்யவும்

இந்த சம்பவம் நிகழ்ந்து நீண்ட நாட்கள் ஆனாலும் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் தற்போது வரை ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அவர் இதற்கு முன்னர் மேடையில் பாடிய பாடலை தோண்டி எடுத்து தற்போது அதை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News