வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விசித்ரா லிஸ்டில் இன்னொரு நடிகையா.? பாலகிருஷ்ணாவை நாரடித்த பிரபலம்

Vichitra –  Balakrishna : சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா கூறிய சம்பவம் அதிர்வு அலையை ஏற்படுத்தி இருந்தது. அதாவது ஒரு படத்தில் நடிக்கும்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததாக கூறியிருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற காட்சியையும் விசித்ரா கூறியிருந்தார்.

இதை அடுத்து நெட்டிசன்கள் அந்த ஹீரோ பாலகிருஷ்ணா என்று கூறி நார் அடித்து இருந்தனர். இந்த சூழலில் இந்த ஹீரோவா இப்படிப்பட்டவர் என பலரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு மற்றொரு அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.

அதாவது பாலகிருஷ்ணாவின் லிஸ்டில் விசித்ரா மட்டுமில்லை வேறு ஒரு நடிகையும் மாட்டியிருக்கிறார் என்று கூறியுள்ளார். அதாவது பாலகிருஷ்ணா கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்த போது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்தாராம். அதன் அருகே சின்ன ஹோட்டலில் கதாநாயகிக்கு ரூம் போடப்பட்டிருக்கிறது.

Also Read : குழம்பிய குட்டையில் மீன் பிடித்த பிக்பாஸ்.. வைல்ட் கார்ட் பத்த வச்ச நெருப்பால் ஆட்டம் கண்ட மாயா மாஃபியா

தற்போது கதாநாயகி இடம் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு காலி செய்துவிட்டு தன்னுடைய ரூமுக்கு பாலகிருஷ்ணா வர சொன்னதாக செய்யாறு பாலு கூறியிருக்கிறார். ஆனால் நடிகை இதை அட்ஜஸ்ட்மென்ட் என்பதை புரிந்து கொண்டு இந்த ரூமே தனக்கு சௌகரியமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

மறுநாள் கதாநாயகி படப்பிடிப்பு தளத்திற்கு வரும் போது அவரை படத்தில் இருந்து தூக்கி விட்டார்களாம். இதற்கு காரணம் பாலகிருஷ்ணா தான் என்று பகிரங்கமான குற்றச்சாட்டை செய்யாறு பாலு வைத்திருக்கிறார். இந்தச் செய்தி உண்மையா என்பது பலருக்கும் அதிர்ச்சி தரும் தகவலாக தான் இருக்கிறது.

Also Read : நீ பண்ற ஜல்ஸா வேலைக்கு கேப்டன் பதவி ஒரு கேடு.. நிக்சனுக்கு பிக்பாஸ் வச்ச ஆப்பு

Trending News