வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்தவன் காசுனா மட்டும் அள்ளிக் கொடுக்கிறது.. இப்போ தானே தெரியுது பாலாவின் சுயரூபம்

இயக்குனர் பாலாவை பற்றி பல பிரபலங்கள் பேட்டியில் கூறியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பாலா நடிகர், நடிகைகளை துன்புறுத்தி தான் வேலை வாங்குவார் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்தப் படம் வெளியான பின்பு அதில் நடித்த நடிகர், நடிகைகளின் மார்க்கெட் வேற லெவலில் சென்றுவிடும்.

ஆனால் தற்போது பாலா மீது உள்ள அபிப்பிராயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சமீபத்தில் தனது மனைவியை பிரிந்து மிகுந்த மனவேதனையில் இருந்த பாலாவுக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. அப்போது தனது கேரியரில் தூக்கி விட்ட பாலாவுக்கு உதவ சூர்யா முன் வந்தார்.

Also Read : பாலா வேண்டாம் அவரை கூப்பிடுங்க என தஞ்சமடைந்த சூர்யா.. யாரும் எதிர்பார்க்காத அடுத்த கூட்டணி

ஆகையால் தான் பாலா, சூர்யா கூட்டணியில் வணங்கான் படம் தொடங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களிடையே கடுமையான வாக்குவாதம் நிலவி பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதன் பின்பு வணங்கான் படத்தில் இருந்து சூர்யா, தனது 2டி நிறுவனத்துடன் விலகிவிட்டார்.

தற்போது வணங்கான் படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் அதர்வா பாலாவின் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். ஆனால் சூர்யாவை வைத்து பிரம்மாண்டமாக எடுக்க நினைத்த பாலா தற்போது சிக்கனமாக செலவு செய்து வருகிறாராம்.

Also Read : பாலா செய்யப்போகும் தரமற்ற வேலை.. 10 கோடிக்கு மீண்டும் தலைவலியில் சிக்கப் போகும் சூர்யா

அதாவது பாலா 10 கோடிக்குள் படத்தை எடுக்க முடிக்க திட்டம் தீட்டி உள்ளாராம். இதற்கு காரணம் வணங்கான் படத்தை தற்போது பாலா தான் தயாரிக்க இருக்கிறார். முதலில் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்ததால் அடுத்தவர் காசு தானே என அள்ளி அள்ளி செலவு செய்தார்.

இப்போது தன் பணம் என்ற உடன் பணத்தை பார்த்து செலவு செய்கிறாராம். மற்றவர்கள் படத்தை தயாரித்தால் தாராளமாக செலவு செய்யும் பாலா தற்போது சொந்த பணம் என்றவுடன் இவ்வாறு சிக்கனமாக செலவு செய்கிறாரே இப்போது தான் அவருடைய சுயரூபம் தெரிந்ததாக பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : எங்கிட்டயே உன் வேலையை காட்டுறியா.. வால்ட்டர் விஷாலை கதற கதறவிட்ட பாலா

Trending News