புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

30 வயது வித்தியாசம் உள்ள நடிகையை திருமணம் செய்த பாலு மகேந்திரா.. கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போன பத்தினி

சினிமா உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமான ஒருவர் என்றால் அது கண்டிப்பாக பாலு மகேந்திரா ஆகத்தான் இருக்க முடியும். அதிலும் ஒளிப்பதிவாளராக இவர் காட்டும் இயற்கைக்கு இணையான விஷயங்களுக்கு அனைவரும் அடிமையாக இருப்போம். இவருடைய மிகச் சிறப்பே ஒவ்வொன்றையும் மிகவும் துல்லியமாக அற்புதமாக எடுப்பது தான். அத்துடன் இவர் டைரக்டர் மற்றும் ரைட்டர் என பன்முகத் திறமையை பெற்றவர்.

இவரைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவுக்கு இவரிடம் புதைந்து இருக்கிறது. அப்படிப்பட்ட இவருடைய இறப்பு சினிமாவிற்கு மட்டுமல்ல நம்முடைய கண்களுக்கு மருந்தாக கொடுத்துக் கொண்டிருந்த இயற்கையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். இவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் மாநிறமாக உள்ள மற்றும் டஸ்கி ஸ்கின் கொண்ட கதாநாயகிகள் தான்.

Also read: ஷோபாவின் மரணத்திற்கு காரணமான 3 விஷயங்கள்.. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்த பாலு மகேந்திரா

அப்படிப்பட்ட இவர் மௌனிகாவின் அழகில் சொக்கி போய் மூன்றாவதாக இவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 30 வயது வித்தியாசம். ஆனாலும் பாலு மகேந்திராவின் மீது ஏற்பட்ட காதலால் வயது பெரிய வித்தியாசம் இல்லை என்று மௌனிகா விருப்பப்பட்டு இவரை மனதார திருமணம் செய்துவிட்டார்.

அதற்குப்பின் பாலு மகேந்திரா இறக்கும் தருவாயில் இவருடைய மனைவியான மௌனிகாவை கூப்பிட்டு 2 சத்தியத்தை வாங்கி இருக்கிறார். அதில் முதல் சத்தியம் என்னவென்றால் நான் இறந்த பிறகு நீ தொடர்ந்து நல்ல இயக்குனர் படங்களில் நடிக்க வேண்டும். என்னை நினைத்து அப்படியே சோர்வாக உட்கார்ந்து விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

Also read: பல்லு போன வயதில் பக்கோடா சாப்பிட்ட 5 பிரபலங்கள்.. 60 வயதில் முப்பதை தட்டி தூக்கிய பாலு மகேந்திரா 

அடுத்தபடியாக இரண்டாவது சத்தியம் நான் இருந்த பிறகு உனக்கு பிடித்த நபரை, உன்னை கண்கலங்காமல் வைத்திருப்பார் என்ற நம்பிக்கை வந்த பிறகு அவரை நீ திருமணம் செய்து அவருடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த இரண்டு சத்தியங்களை பற்றி தற்போது மௌனிகா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அத்துடன் இவருடைய கணவர் வாங்கின இரண்டாவது சத்தியத்தை என்னால் செய்யவே முடியாது. நான் ஒவ்வொரு நாளும் அவரை மனதில் வைத்துக் கொண்டே என்னுடைய மிச்சமுள்ள வாழ்க்கையை நான் நடத்தி முடித்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். மேலும் இவர் கணவர் கேட்ட முதல் சத்தியத்தின்படி தற்போது இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

Also read: கமலோட கணிப்பு சாதாரணமானது அல்ல.. காமெடி நடிகையை பார்த்து மிரண்டு போன பாலுமகேந்திரா

Trending News