சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கத்துக்குட்டியிடம் கந்தலாகிய ஆஸ்திரேலியா.. 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பு அசுரபலம் எடுக்கும் அணி.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T-20 போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால்பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 121 ரன்களை மட்டுமே எடுத்தது.

பின்னர் தனது ஆட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக போட்டியை வென்றது. அந்த அணியின் அபிப் ஹோசைன் 37 ரன்கள் எடுத்து மேன் ஆப் தி மேட்ச் வென்றார். இதன் மூலம் இரண்டு போட்டிகளை வென்று மீதமுள்ள மூன்று போட்டிகளை வெற்றி பெறும் எண்ணத்தில் உள்ளது பங்களாதேஷ் அணி.

Bangladesh-Cinemapettai.jpg
Bangladesh-Cinemapettai.jpg

முன்னணி வீரர்கள் ஆகிய தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், போன்ற அதிரடி வீரர்கள் இல்லாமலே பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் வரவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு போட்டியிடும் ஒரு வலுவான அணியாக உருவாகி வருகிறது.

Trending News