வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தகுதி இல்லை, வெளிப்படையாக சொன்ன பங்களாதேஷ் கேப்டன்.. இந்தியாவிற்கு விட்ட சவால்

இந்திய கிரிக்கெட் அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது சவால் நிறைந்தது எனவும், அது எங்களுக்கு எளிதான விஷயம் என்று பங்களாதேஷ் அணி இந்தியாவுடனான தொடருக்கு முன் பேசி வந்தனர். 2 டெஸ்ட் போட்டி 3 ஒரு நாள் போட்டி என ஒரு சிறிய தொடருக்காக இங்க வந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் அவர்களது சொந்த மண்ணில் அவர்களை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி இருந்தார்கள் பங்களாதேஷ் அணி. அது மட்டும் இன்றி கடந்த ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா சென்று அங்கே நடந்த ஒரு நாள் தொடரையும் கைப்பற்றினார்கள். இதனால் அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே பேசி வந்தனர்.

இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டியளையும் தோற்றனர். டெஸ்ட் தோற்றால் என்ன எங்களிடம் அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் நாங்கள் எளிதாக இருவது ஓவரில் வெற்றி பெறுவோம் என காலரை தூக்கிவிட்டு திரிந்தனர். ஆனால் இப்பொழுது இந்திய அணியிடம் மொத்தமாய் சரண்டர் ஆகிவிட்டனர்.

இந்தியாவிற்கு விட்ட சவால்

தங்களுக்கு 20 ஓவர் போட்டியில் 180- 200 ரன்கள் எப்படி அடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இந்த வகை போட்டியில் எங்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்றும் வெளிப்படையாக அந்த அணியின் கேப்டன் நஜ்முல் சாந்டோ நேற்றைய போட்டிக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.

எங்களிடம் அதிரடி ஆட்டம் ஆடும் வீரர்கள் நடு வரிசையில் இல்லை. முன்வரிசையில் இருந்தாலும் அவர்களுக்கு எப்படி விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாட வேண்டும் என்பது தெரியவில்லை. எங்கள் நாட்டில் 140-150 என்ற வடிவிலான பிட்சில் விளையாடி வந்தோம். இது எங்களுக்கு கடினமாக இருக்கிறது என ஒப்புக் கொண்டார்.

Trending News