சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வாய்ச்சவடால் விடும் பங்களாதேஷ் அணி.. விராட் கோலியை வம்பிழுக்கும் குட்டி தம்பி

பங்களாதேஷ் அணியினர் இந்த மாதத்தில் இந்தியா வருகிறார்கள், இங்கே இந்திய அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் விளையாட இருக்கிறார்கள். ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகள் விளையாடி நீண்ட நாட்கள் ஆகிறது

கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது தான் இந்திய அணியின் கடைசி போட்டியாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவில்லை. அந்த போட்டியிலும் இந்தியா, இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.

இப்பொழுது பங்களாதேஷ் அணியுடன் வருகிற 19ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. இரண்டாவது போட்டி கான்பூர் மைதானத்தில் 27ஆம் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் 3 இருபது ஓவர் போட்டிகள் வருகிற அக்டோபர் மாதத்தில் 7,10 மற்றும் 13ஆம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. இப்பொழுது பங்களாதேஷ் அணியின் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் முன்பே வாய்கிழிய பேசி வருகிறார்கள்.

விராட் கோலியை வம்பிழுக்கும் குட்டி தம்பி

பாகிஸ்தான் அணியுடன் அவர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று வரலாற்று சாதனை படைத்ததால் தலைகால் புரியாமல் ஆடி வருகிறார்கள்.பாகிஸ்தானை விட இந்தியாவை எதிர்கொள்வது மிகவும் எளிது அவர்களை எளிதாக வீழ்த்துவோம் என வாய்ச்சவடால் விடுகின்றனர்.

மேலும் அந்த அணியினர் இந்திய அணிக்கு எதிராக ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு யுக்தி வைத்திருக்கிறோம். அதை நீங்கள் மைதானத்தில் பார்க்கலாம் என வெளிப்படையாகவே சேலஞ்ச் செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக விராட் கோலியை எளிதில் வீழ்த்துவோம் என முஷ்பிகுர் ரஹீம் தெனாவட்டு காட்டுகிறார்.

Trending News