புதன்கிழமை, ஜனவரி 15, 2025

3 ஆண்டுகள் தடை.. அடல்ட் மூவியை குறிவைத்து களமிறங்கும் வெங்கட் பிரபு பட நடிகை

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் குத்தாட்டம் போட்டதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை நிகிதா. மும்பையை பூர்வீகமாக கொண்ட நிகிதா தமிழில் 2003ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் வெளியான சத்ரபதி, சிபிராஜ் நடிப்பில் வெளியான வெற்றிவேல் சக்திவேல் நடித்தார். இவருக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் கன்னடத்தில் மிகவும் பிரபலமாக இருந்தார். அந்த சமயத்தில் தான் கன்னட நடிகர் தர்ஷன் சிங்குடன் நிகிதா மறைமுக உறவில் இருந்து வந்ததாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் தர்ஷனின் மனைவி தனது கணவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக கூறி நடிகை நிகிதா மீது கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்தார். இதனால் கன்னட திரைப்பட சங்கம் நிகிதாவிற்கு சுமார் 3 ஆண்டுகள் கன்னட படங்களில் நடிக்க தடை விதித்தது.

இருப்பினும் அதை பற்றியெல்லாம் பெரிதும் அலட்டி கொள்ளாத நிகிதா கன்னட சினிமா இல்லாவிட்டால் பரவாயில்லை என கூறி தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற இதர மொழி படங்களில் நடித்து வந்தார். பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு கங்கா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க முடிவு செய்துள்ளாராம். அதனால் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்து வந்த நிகிதாவிற்கு புதிய பட வாய்ப்பை ஒன்று கிடைத்துள்ளதாம்.

ஆனால் அது ஒரு அடல்ட் படம். இருந்தாலும் பரவாயில்லை கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என்று நினைத்த நிகிதா படத்தில் தாராள கவர்ச்சி காட்ட தயாராக உள்ளாராம். இப்படம் மூலம் விட்ட மார்க்கெட்டை பிடிக்க நினைக்கிறார் போல.

Trending News