வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மேட்ச் பினிஷர்னு சும்மா சொல்லல.. மொத்தமாக 142 போட்டிகள் பவுலர்களுக்கு தண்ணிகாட்டிய தோனி

கிரிக்கெட் போட்டிகள் முதன்முதலில் டெஸ்ட் வடிவத்தில் ஆரம்பமானது அதன் பின்னர் ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள், டி10 போட்டிகள் என பல வகையான போட்டிகளை தற்போது விளையாடி வருகின்றனர். அப்படிப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் இடம்பெற்றுள்ளன.

பல சாதனைகள் இடம் பெற்றிருந்தாலும் அதில் ஒரு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுவது ஆட்டத்தின் இறுதி வரை ஒரு வீரர் ஆட்டமிழக்காமல் நிற்பதுதான். அப்படி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக முறை அவுட்டாகாமல் இறுதிவரை நின்ற ஒரு சில வீரர்களை பற்றி இதில் காண்போம்,

சமிந்த வாஸ்: இவர் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து பந்துவீச்சாளர், பேட்டிங்கில் அவ்வளவு பெரிய பங்களிப்பை இவர் அழிக்காமல் இருந்திருந்தாலும் பவுலிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இவர் எப்பொழுதுமே அணியின் கடைசி வீரராக களம் இறங்குவார் அதன் காரணமாகவே அனைவரும் அவுட்டாகி செல்ல இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நிற்பார்.

சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளில் 35 முறையும், ஒருநாள் போட்டிகளில் 72 முறையும், இருபது-20 போட்டியில் ஒரு முறையும் அவுட்டாகாமல் மொத்தம் 108 முறை நாட் அவுட்டாக இறுதிவரை நின்றிருக்கிறார்.

Chaminda-vaas-Cinemapettai-1.jpg
Chaminda-vaas-Cinemapettai-1.jpg

ஷான் பொல்லாக்: தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் இவர் .மிக அபாயகரமான எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எளிதாக வீழ்த்தி விடுவார். இவரும் கிட்டத்தட்ட கடைசி விக்கெட்டாக தான் களமிறங்குவார் அதன் காரணமாகவே இவர் ஒருநாள் போட்டிகளில் 72 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 39 முறையும், 20-20 போட்டிகளில் 20 முறையும் அவுட்டாகாமல் மொத்தமாக 113 முறை நாட் அவுட்டாக இருந்திருக்கிறார்.

Shaun-Pollock-Cinemapettai.jpg
Shaun-Pollock-Cinemapettai.jpg

முத்தையா முரளிதரன்: இலங்கைக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் செய்த சாதனையை அவ்வளவு எளிதில் யாராலும் முறியடிக்க இயலாது . கடைசி விக்கெட்டாக தான் களமிறங்குவார்.

Muralitharan-Cinemapettai.jpg
Muralitharan-Cinemapettai.jpg

டெஸ்ட் போட்டிகளில் 56 முறையும் ஒருநாள் போட்டிகளில் 63 முறையும் அவுட்டாகாமல் இருந்துள்ளார். மொத்தமாக 119 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்: இவர் இங்கிலாந்து அணிக்காக 212 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் குவித்தவர் பட்டியலில் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தமாக 135 முறைகள் நாட் அவுட்டாக இருந்துள்ளார். 89 முறை டெஸ்ட் போட்டிகளிலும், 43 முறை ஒருநாள் போட்டிகளிலும், மூன்று முறை 20 ஓவர் போட்டிகளிலும் அவுட்டாகாமல் இருந்துள்ளார்.

James-Cinemapettai.jpg
James-Cinemapettai.jpg

மகேந்திர சிங் தோனி: ஒரு பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரில் இறங்கி நாட் அவுட்டாக நிற்பது என்பது மிகப்பெரிய விஷயம். இதன் காரணமாகவே இவர் ஒரு தலைசிறந்தமேட்ச் பினிஷர் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார். இந்திய அணிக்காக பல போட்டிகளில் இறுதிவரை அவுட்டாகாமல் நின்று வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். தோனி ஒருநாள் போட்டிகளில் 84 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 16 முறையும், டி20 போட்டிகளில் 43 முறையும் அவுட்டாகாமல் நின்று இந்திய அணியை கரை சேர்த்துள்ளார். மொத்தமாக 142 முறை நாட் அவுட் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

MSDhoni-Cinemapettai.jpg
MSDhoni-Cinemapettai.jpg

Trending News