திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அஜித் பட நடிகையை ஆபாசமாக பேசிய பிரபலம்.. கடும் கோபத்தில் பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்

பத்திரிகையாளர் என்ற பெயரில் தொடர்ந்து ஆபாசமான கருத்துக்களையும் அடுத்தவர்களைப் பற்றிய கேவலமான பேச்சையும் முன்வைத்து பிரபலம் அடைய முயற்சி செய்பவர் நடிகர் ரங்கநாதன். தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்த அவர் தற்போது பத்திரிகையாளராகவும் இருக்கிறார்.

சமீப காலமாக இவர் நடிகர், நடிகைகளை பற்றிய அவதூறு மற்றும் சர்ச்சை கருத்துக்களை வீடியோக்கள் மூலம் பரப்பி வருகிறார். அந்த வரிசையில் அவர் தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பற்றிய ஆபாச கருத்து ஒன்றை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது நடிகைகள் அனைவரும் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் வாய்ப்புக்காக நடிகைகள் பலரும் கவர்ச்சியாக உடலை காட்டி போட்டோ ஷூட் செய்து அதை மீடியாவில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படி தங்கள் உடலை காட்டி பிரபலமடைந்த நடிகைகள் என அமலாபால், மாளவிகா மோகனன், ரெஜினா, ராஷ்மிகா, ஷாலினி பாண்டே ஆகியோரை குறிப்பிட்டு கூறியுள்ளார். இவர்களுடன் சேர்த்து நடிகர் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகை கனிகாவின் பெயரையும் அவர் கூறியுள்ளார்.

தமிழில் பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் அந்த பட வெற்றியை தொடர்ந்து ஆட்டோகிராப், எதிரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சன் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் கனிகா, பயில்வான் ரங்கநாதன் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பயில்வான் பேசிய அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கனிகா இவர் மீது நான் எப்படி புகார் அளிக்க முடியும். இவரின் அனைத்து பேச்சுகளும் ஆபாசங்கள் நிறைந்திருக்கிறது. இது போன்ற போலி பத்திரிகையாளர்கள் கூறும் கருத்தை நான் எப்போதும் கண்டுகொள்வதில்லை.

ஆனால் இவர் பேசிய பேச்சு என்னை அதிக கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா துறையில் இருக்கும் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என்று காட்டுகிறது அவருடைய இந்த கேவலமான பேச்சு. அதை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதுதான் வேதனை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை கனிகாவுக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் அவரை இப்படி ஆபாசமாக பேசி இருப்பது அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி பாப்புலாரிட்டிகாக மற்றவர்களை ஆபாசமாக சித்தரித்து பேசும் இவரை போன்றவர்கள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ.

Trending News