புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஹரி நாடருன் எனக்கு தொடர்பா.? பிரபலத்தை கிழித்தெறிந்த விஜயலட்சுமி!

தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜயலட்சுமி. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். ஆனால் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகையாக வலம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

சரியான கதைகளை தேர்ந்து எடுக்காததால் நடித்த ஒரு சில படங்களும் தோல்வி அடைந்தன. அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் எந்த நடிகருடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் கடைசியாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் மற்றும் இயக்கத்தில் வெளியான மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.

சமீபகாலமாக பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நடக்கும் பல திடுக்கிடும் தகவல்களை கூறிவருகிறார். இதில் அவர் சொல்வது முக்கால்வாசி பொய்யாக தெரிந்தாலும், ஏதோ கால்வாசி உண்மை இருப்பதுபோல் தெரிகிறது என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

bayilvan-ranganathan-cinemapettai
bayilvan-ranganathan-cinemapettai

அதனை பயில்வான் ரங்கநாதன் ஒப்புக்கொண்டுள்ளார். நான் பேசுவதில் 60 சதவீதம் உண்மையாக இருக்கலாம், ஆனால் 40 சதவீதம் நான் அந்த செய்தியை மிகைப்படுத்திதான் பேசுவேன் என கூறியுள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் விஜயலட்சுமிடம் தான் ஹரி நாடார் அனைத்து நகைகளும் கொடுத்து வைத்துள்ளார் என ஒரு சர்ச்சையான செய்தியை கூறியிருந்தார். இதனைக் கேட்ட விஜயலட்சுமி நீங்கள் சொல்வது பொய் எனக் கூறியது மட்டுமில்லாமல் ஒரு கட்டத்திற்கு மேல் போய் பயில்வான் ரங்கநாதன் ஒருமையாக திட்டியுள்ளார்.

சமீபகாலமாக பலரும் ஒரு நடிகரைப் பற்றி ஏதாவது 1 விஷயம் தெரிந்தால் அதனை 9 விஷயங்களாக பேசி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இதன் மூலம் இவர்களுக்கு என்ன தான் கிடைக்கும் என்பது தெரியவில்லை. இந்தமாதிரி தவறான விஷயங்களை பற்றி பேசும் பலரையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காரி துப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் உண்மை தெரிந்தால் மட்டும் பேசுங்கள் தேவை இல்லாமல் பொய் பேசாதீர்கள் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Trending News