செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நாங்க என்ன கேனப்பயலா? வாரிசு விஜய்யை சீண்டிய பயில்வான்

வரும் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிறது. இந்த நிலையில் வாரிசு ட்ரெய்லரை குறித்து தன்னுடைய விமர்சனத்தை வீடியோவாக ஷேர் செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

வாரிசு படத்தில் கூட்டுக்குடும்பம், ஆக்சன், காதல் என அனைத்தும் இருக்கிறது. நேற்று முன்தினம் வெளியான வாரிசு படத்தின் டிரைலர் ரசிகர்களை உசுப்பேற்ற விதத்தில் தான் இருக்கிறது. மேலும் ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே விஜய்யின் அம்மாவாக நடித்திருக்கும் ஜெயசுதா, ‘இது கல்லால் கட்டப்பட்ட வீடு அல்ல’ என பேசுகிறார். அதே போல் ‘குடும்பத்தில் குறை இருக்கலாம். ஆனால் நாம் ஒரே குடும்பம்’ என்று விஜய்யின் மாஸ் வசனமும் உள்ளது.

Also Read: விஜய்யுடன் நடித்து மார்க்கெட்டை குறைத்துக் கொண்ட அஜித்.. பிரபலத்திடம் புலம்பி தீர்த்து விட்டாராம்

விஜய் ஒரே குடும்பம் என அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளை சொல்கிறாரா? இல்லை, அவருடைய அம்மா ஷோபா மற்றும் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தனிக் குடும்பமா? என்றும் பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்புகிறார். மேலும் விஜய் சொந்த வாழ்க்கையில் ஏன் கூட்டுக் குடும்பத்தை விரும்பவில்லை.

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா! சினிமாவில் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் போது அதை விஜய் நடைமுறை வாழ்க்கையில் செய்து காட்ட வேண்டும் என்றும் வாரிசு விஜய்யை பயில்வான் ரங்கநாதன் சீண்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி வாலிப வயதில் விஜய்க்கு மகன் இருக்கும்போது, விஜய் இன்னும் வாலிபனாகவே ரசிகர்கள் கண்ணுக்கு தெரிவது சூப்பரோ சூப்பர்.

Also Read: விஜய்யுடன் நடித்து மார்க்கெட்டை குறைத்துக் கொண்ட அஜித்.. பிரபலத்திடம் புலம்பி தீர்த்து விட்டாராம்

மேலும் வாரிசு படத்தில் ‘வா தலைவா! வா தலைவா! நீயே உனக்கு தலைவா வா!’ என்று பாடல் இடம் பெற்றிருக்கிறது. இது என்னையா விஜய்க்கு அவரே எப்படி தலைவா ஆக முடியும். இந்த பாட்ட கேக்குறதுக்கு நாங்க என்ன கேனப்பயலா! என்றும் பயில்வான் ரங்கநாதன் வாரிசு பட ட்ரெய்லரை குறித்து விமர்சித்திருக்கிறார்.

இவருடைய இந்த வீடியோ பதிவிற்கு தளபதி ரசிகர்கள் கண்டமேனிக்க கழுவி கழுவி ஊற்றுகின்றனர். ஏனென்றால் சோசியல் மீடியாவில் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா பிரபலங்களையும் கேவலமாக பேசிக் கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன் தற்போது விஜய்யின் குடும்பத்தையும், அவருடைய வாரிசு படத்தையும் குறித்து கமெண்ட் செய்திருப்பதால் தளபதி ரசிகர்கள் வெறியேறி உள்ளனர்.

Also Read: தாறுமாறாக எகிறிய வாரிசு-வின் டிக்கெட் விலை.. ஒரு பாப்கார்ன், ஒரு கொக்ககோலா ஃப்ரீ என விளம்பரம் வேற

Trending News