சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சூட்டிங் ஸ்பாட்டை பெட் ரூமாக்கிய ராதிகா.. ஒரே வருடத்தில் சங்கு ஊதி காதலரை கழட்டி விட்ட கொடுமை

Actress Radhika: நடிகை ராதிகா, நடிகை வேள் எம் ஆர் ராதாவின் பெயரைக் காப்பாற்ற வந்த சினிமா வாரிசு. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பக்காவாக பொருந்தி நடிக்க கூடியவர். வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி பெற்றார்.

இவரை பார்த்து தான் அடுத்தடுத்து வெள்ளித்திரை நடிகைகள் சீரியலில் என்ட்ரி கொடுத்தார்கள். சினிமாவில் வெற்றி கண்ட ராதிகா இப்போது அரசியலிலும் களம் காண இருக்கிறார். எந்த அளவுக்கு ராதிகா சினிமாவில் பெயர் வாங்கி இருக்கிறாரோ, அதே அளவுக்கு சர்ச்சைக்கும் பேர் போனவர்.

அடுத்தடுத்து மூன்று திருமணங்கள் மூலம் இன்று வரை அவரை வசை பாடாத கூட்டம் இல்லை. அதே நேரத்தில் பல இடங்களில் ராதிகாவுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் இஷ்டத்துக்கு பேசி விடுவார். இதனாலும் அவர் மீது நிறைய பேருக்கு கோபம் வருவது உண்டு.

ராதிகா பற்றி வயில்வாங்கநாதன் இப்போது ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். நடிகை ராதிகாவின் முதல் கணவர் தான் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதாப் போத்தன். கையில் கிட்டாரை வைத்துக்கொண்டு என் இனிய பொன் நிலாவே என அவர் பாடுவதை எப்போதும் மறக்க முடியாது.

இப்போதைய 2k கிட்ஸ்களுக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் படிக்காதவன் படத்தில் தனுசுக்கு அப்பாவாக நடித்தவர் என்று சொல்லலாம். ராதிகா மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் தான் இவர்களுடைய சந்திப்பு நடந்தது. அந்த படத்தை பிரதாப் இயக்க ராதிகா தயாரித்திருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி இருக்கிறது. அப்போது ராதிகா ஹைதராபாத்திலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கிறார்.

Pradap Radhika
Pradap Radhika

அங்கே பிரதாப்பை பார்த்ததும் யார் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு இருவரும் கட்டிப் பிடித்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சுற்றி இருக்கும் கூட்டத்தையே மறந்து விட்டு வெளிநாட்டு ஸ்டைலில் லிப் கிஸ் வேறு கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இருவரும் உருகி உருகி காதலித்து இருக்கிறார்கள்.

ஒரே வருடத்தில் சங்கு ஊதி காதலரை கழட்டி விட்ட கொடுமை

அவசர அவசரமாய் காதலித்து, அவசரமாய் திருமணமும் செய்து கொண்டார்கள். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை கொஞ்ச நாள் கூட நீடிக்க வில்லை. திருமணமான ஒரே வருடத்தில் ராதிகா, தன்னுடைய ஆசை காதலர் பிரதாப்பை விவாகரத்து செய்து விட்டார்.

அப்போதைய காலகட்டத்தில் திருமணம் ஆன ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த முதல் நடிகை ராதிகா தான். ராதிகாவை பிரிந்த கொஞ்ச நாளிலேயே பிரதாப் போத்தன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் ராதிகாவும் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தது.

ஆனால் அந்த வாழ்க்கையும் அவருக்கு கசந்து விட்டது. அதனால் அந்த தொழிலதிபர் ரிச்சர்ட் என்பவரையும் விவாகரத்து செய்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த பெண் தான் ரேயான். இவர் கிரிக்கெட் வீரர் மிதுனை திருமணம் செய்திருக்கிறார்.

Trending News