வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பயில்வான் ரங்கநாதனை கிழித்த சுஹாசினி.. இப்படி பண்ணா யாருதான் திட்டாம இருப்பாங்க.

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி பிரபல பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தார்.

தற்போது சினிமாவில் நடந்து வரும் கிசுகிசு, வதந்தி போன்ற சீக்ரெட் செய்தி மற்றும் சம்பவங்கள் குறித்து யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகைகளிடம் திட்டு வாங்கியதை பற்றி கூறியுள்ள பயில்வான் தன்னை முதன் முதலில் திட்டியது நடிகை சுஹாசினி மணிரத்னம் தான் என கூறியுள்ளார். சுஹாசினி அறிமுகமாகிய முதல் படத்தின் போது பயில்வான் இது பொம்பள மூஞ்சியா? ஆம்பள மாதிரி இருக்கு என விமர்சித்து எழுதியுள்ளார்.

suhasini
suhasini

பின்னர் பட விழா ஒன்றில் நடிகை சுஹாசினியை பார்த்த பயில்வான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், நல்லா நடிக்கிறீர்கள் என்று பாராட்டியுள்ளார். அதற்கு பதிலளித்த சுஹாசினி, உண்மையை சொல்லுங்க, நீங்கள் தானே என்னை அப்படி கூறினீர்கள் என்று நேராகவே கூறி பயங்கரமாக திட்டியுள்ளார்.

இந்தத் தகவலை தற்போது பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இது மட்டுமின்றி சமீபகாலமாக பல முன்னணி நடிகர்களின் அந்தரங்க தகவல்களையும் வெளிப்படையாக கூறி வருகிறார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

Trending News