வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மசாஜ் சென்டரால் சிக்கிய சிவகார்த்திகேயன்.. அந்த மாதிரி தொழிலா.? பயில்வான் கிளப்பிய சர்ச்சை

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களாகவே பிரச்சனைக்கு மேல் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் கடனில் சிக்கி வந்த சிவகார்த்திகேயன் இப்போது தான் அதிலிருந்து மீண்டும் வந்தார். அடுத்ததாக இமான் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு வைத்த நிலையில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

இதைத்தொடர்ந்து அயலான் படம் ரிலீஸ் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. அதையும் சரி செய்து படத்தை வெளியிட்டால் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. இப்போது மசாஜ் சென்டரால் சிவகார்த்திகேயன் பெயரை டேமேஜ் செய்து இருக்கிறார் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன்.

இப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் அந்தரங்கத் தொழில் நடந்து வருவதாக பயில்வான் குற்றச்சாட்டு வைத்திருந்தார். சோனா என்ற நடிகை மசாஜ் சென்டர் ஒன்று தொடங்கி இருந்தார். அந்த மசாஜ் சென்டரை சிவகார்த்திகேயன் தான் திறந்து வைத்தார். ஆனால் அங்கு வேறு மாதிரியான தொழில் நடந்து வருகிறது என யூடியூபில் பயில்வான் பேசி இருந்தார்.

Also Read : சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்ட விஜய் டிவி பிரபலம்.. நேரில் கூட பேசாமல் அசிங்கப்படுத்திய சம்பவம்

நேற்று நடிகை சோனா தன்னையும் தன்னுடைய மசாஜ் சென்டரை பற்றி அவதூறு பரப்புவதாக பயில்வான் மீது புகார் கொடுத்திருக்கிறார். இதை அடுத்து பயில்வான் ரங்கநாதன் மேலும் ஒரு வீடியோ போட்டு உள்ளார். அதாவது நடிகையின் பின்னால் பிரபலத்தின் தூண்டுதல் உள்ளது.

அதன் காரணமாகத் தான் இப்போது என் மீது புகார் கொடுத்து குண்டர் சட்டத்தில் போட திட்டம் போட்டுள்ளனர். இதற்கெல்லாம் துளியும் நான் பயப்பட மாட்டேன் என்று வீர வசனத்தை பயில்வான் பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் கடைசியில் இந்த பிரச்சனையிலும் சிவகார்த்திகேயனின் பேரையும் பயில்வான் சேர்த்து இழுத்து விட்டுள்ளார்.

Also Read : அவசரமாக அறிவிக்கப்பட்ட அயலான் 2.. சிவகார்த்திகேயனுக்கு தெரியாமலே நடந்த சம்பவம்

Trending News