வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

சூர்யாவை புகழ்ந்ததால் சர்ச்சையில் சிக்கிய சூரி.. கடுப்பில் வச்சு செய்த பயில்வான்

நடிகர் சூரி தற்போது விருமன், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் விருமன் விரைவில் வெளியாக இருக்கிறது. சூர்யா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் படத்தின் நாயகி அதிதி சங்கர், சூர்யா, கார்த்தி, இயக்குனர் சங்கர், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சூரி ஆயிரமாயிரம் கோவில்களையும், அன்னச்சத்திரங்களையும் கட்டுவதை விட ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது தான் முக்கியம். அதை சூர்யா அண்ணன் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் சமூகக் கருத்துக் கொண்ட பல நல்ல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார் என்று புகழ்ந்து பேசி இருந்தார். அவர் எதார்த்தமாக பேசிய அந்த பேச்சு தற்போது ஒரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சூரி இந்து கோவில்களை அவமதித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் சில எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் சூரிக்கு எதிராக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டின் சிறப்பே கோவில்கள் தான். அதனால் தான் அரசர்கள் அந்த காலத்தில் கோவில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

தமிழர்களின் அறிவு கூர்மையை பறைசாற்றுவதற்கு இந்த கோவில்களே உதாரணம். தமிழக அரசு தன்னுடைய லோகோவாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலை தான் வைத்திருக்கிறது. இதைப்பற்றி தெரியாமல் சூரி அறக்கட்டளை தான் முக்கியம் என்று எப்படி கூறலாம் என்று ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டில் யாரும் உணவு இல்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறைந்த விலையில் உணவுகளை கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். அவ்வளவு ஏன் சூரி கூட ஹோட்டல் தொழிலை தான் செய்து வருகிறார். இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா, ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட நீங்கள் கஷ்டப்பட்டவர் தானே அதை மறந்து விடாதீர்கள் என்று பயில்வான் சூரியை வன்மையாக கண்டித்துள்ளார்.

அவருடைய இந்த பேச்சு தற்போது திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒரு சில ரசிகர்கள் சூரிக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர் சாதாரணமாக கூறிய அந்த கருத்துக்கு பயில்வான் எதற்காக இவ்வளவு ஆவேசப்பட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News