வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திருட்டு காசுல படம் எடுக்கிற தங்கர் பச்சான் , ரஜினிய பத்தி பேசுன நாரடிச்சிடுவோம்.. எரிமலையாக வெடித்த பயில்வான்

Rajinikanth: தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபலமாக விரும்புபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி பேசுவதை ஒரு புதிய ட்ரெண்டாக கொண்டு வருகிறார்கள். ரஜினிகாந்த் மற்றும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை பற்றி பேசினால் மக்களால் அதிகம் கவனிக்கப்படுவோம் என்று நினைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார்களா என்று தெரியவில்லை. சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது.

பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய பட விழா ஒன்றில் தேவை இல்லாமல் ரஜினிகாந்த் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அவருக்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் பயில்வான் ரங்கநாதன் தன்னால் முடிந்த வரை அந்த இயக்குனரை கழுவி ஊற்றியதோடு, ரஜினியை பற்றி பேசினால் இனி அவ்வளவு தான் என மறைமுக மிரட்டலும் கொடுத்து இருக்கிறார்.

Also Read:ஜிவி பிரகாஷை வச்சு நசுக்கிய ஜெயிலர்.. அடியே படத்திற்கு போட்ட காசை எடுக்க முடியாமல் திணறும் முதல் நாள் கலெக்ஷன்

தமிழில் அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற எதார்த்தமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இயக்குனர் தங்கர் பச்சான். இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு கருவேகங்கள் கலைகின்றன என்ற தலைப்பில் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் பட விழா ஒன்றில் ரஜினியை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு 500 கோடி வரை வசூலித்தது. இந்த வசூலை பற்றி பேசிய தங்கர் பச்சான் ரொம்பவும் மோசமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். இதுக்கு பதிலடி கொடுத்த ரங்கநாதன் திருட்டு பணத்தில் படம் எடுக்கும் நீ ரஜினியை பற்றி பேசுகிறாயா என்று ரொம்பவும் கோபத்துடன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Also Read:525 கோடியை தாண்டிய ஜெயிலர் வசூல்.. கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய முத்துவேல் பாண்டியனின் புகைப்படம்

கருமேகங்கள் கலைகின்றன படத்தின் தயாரிப்பாளர் தான் துரை வீர சக்தி. இவர் ஏற்கனவே ஓ மை கோஸ்ட் என்ற படத்தை தயாரித்தார். இவர் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மூலம் மக்களிடம் ஆயிரம் கோடி வசூல் செய்து திருடிக் கொண்டு ஓடி விட்டார். இந்த விஷயம் எல்லாம் தெரிந்து அவர் காசில் படம் எடுக்கிற தங்கர்பச்சானுக்கு ரஜினியை பற்றி பேச தகுதியில்லை என்று பயில்வான் சொல்லியிருக்கிறார்.

மேலும், நீ உண்மையான கலைஞன் தான், தமிழ் மீது அதிக மரியாதை உள்ள கலைஞனும் தான் , உன் மீது எனக்கும் நல்ல மரியாதை இருக்கிறது, இருந்தாலும் ரஜினியை பற்றி இனி ஏதாவது பேசினால் மொத்தமாக நாறடித்து மரியாதையை கெடுத்து விடுவோம் என்று பயில்வான் ரங்கநாதன் சொல்லி இருக்கிறார்.

Also Read:முதல் நாள் முதல் ஷோவில் மண்ணை கவ்விய ரஜினி, கமலின் படங்கள்.. ஹைஃபை ஏற்றி படுதோல்வியான சம்பவம்

Trending News