புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எல்லையை மீறி முட்டிக் கொண்ட பிரச்சனை.. தயாரிப்பாளரை கண்டபடி விளாசிய பயில்வான்

நடிகராகவும், பத்திரிகையாளராகவும் பல தைரியமான கருத்துகளை பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் பற்றி கடந்த சில நாட்களாக ஒரு புகார் எழுந்து வருகிறது. அவர் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளை பற்றி பல அவதூறு கருத்துக்களை பேசி வருவதாக தயாரிப்பாளர் கே ராஜன் காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவரின் அந்த புகாருக்கு தற்போது பயில்வான் ரங்கநாதன் பதில் புகார் ஒன்றை காவல்துறையில் அளித்துள்ளார். அதில் அவர் தன்னை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார்.

அதாவது நான் பேசும் எல்லா விஷயங்களுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. பொய்யான விஷயங்களை நான் எப்போதும் கூறுவது கிடையாது. அதனால்தான் யூடியூப் சேனலில் எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். என்னை பொதுவெளியில் பார்க்கும் பொதுமக்கள் பல உண்மைகளை நான் வெளிப்படையாக பேசுவதாக என்னை பாராட்டி வருகின்றனர்.

இதையெல்லாம் பார்த்து தான் தயாரிப்பாளர் ராஜனுக்கு என் மேல் பொறாமை வந்து விட்டது. அதனால்தான் அவர் என்னைப் பற்றி இப்படி பொய்யான விஷயங்களை பரப்பி வருகிறார். மேலும் தன்னை தானே தயாரிப்பாளர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் ஒரு காலி பெருங்காய டப்பா என்றும், என்னை பற்றி கூறும் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்கத் தயாரா என்றும் பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தன்னைப் பற்றிய விஷயங்களை அவர் பொய் என்று நிரூபித்தால் நான் என் பத்திரிக்கையாளர் தொழிலையே விட்டு விடுகிறேன். அப்படி இல்லை என்றால் அவர் நிர்வாணமாக நடத்த தயாரா என்று கண்டபடி பேசியுள்ளார்.

மேலும் இசை இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜன் செல்லும் போது தேவையில்லாமல் பிரபலமாக இருக்கும் நடிகைகளை பற்றி கொச்சையாக பேசி பப்ளிசிட்டி தேடுகிறார். அதுபோல்தான் என்னைப் பற்றியும் அவர் பேசி வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

அவருடைய இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் சமீபகாலமாக பப்ளிசிட்டிக்காக கண்டதையும் உளறிக் கொண்டிருப்பவர் கே ராஜன். அதன் அடிப்படையில்தான் அவர் பயில்வானையும் வம்புக்கு இழுத்து உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Trending News