சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

3-வது வாரத்திலேயே டபுள் எவிக்சன்.. உப்புக்குச் சப்பானிகளை தூக்கி எறியும் ரசிகர்கள்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் காரசாரமான விவாதங்களையும் சண்டை சச்சரவு டன் போட்டி போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா ஆகிய இரண்டு பேர் எலிமினேட் ஆகி உள்ளனர். அதில் மூன்றாவது வாரத்தின் இறுதி நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த வாரம் இரண்டு நபர் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரம் நெருங்கும் போதுதான் டபுள் எரிக்சன் நிகழும். ஆனால் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சியில், கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்த, துவங்கிய மூன்றாவது வாரத்திலேயே டபுள் எவிக்சன் நிகழப்போகிறது.

ஆகையால் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் தாமரைச்செல்வி, தாடி பாலாஜி, ஜூலி, பாலாஜி முருகதாஸ், நிரூப், அனிதா சம்பத், சினேகன், சாரிக், அபினை, ஆகிய எட்டு பேரில் இரண்டு பேர் எலிமினேட் ஆக போகின்றனர்.

குறிப்பாக அபினை மற்றும் தாடி பாலாஜி இருவரும் நிகழ்ச்சியில் தங்களது முழு பங்களிப்பையும் கொடுக்காமல் ஏனோ தானோ என்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அபினை கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் சுத்தமாக பயன்படுத்தவில்லை.

மேலும் தாடி பாலாஜியும் எந்தத் தப்பும் செய்திடக் கூடாது என பார்த்து பார்த்து விளையாடுகிறார். ஆகையால் இவர்கள் இரண்டு பேர்தான் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் வரும் ஞாயிற்றுக்கிழமை யார் எலிமினேட் ஆக போகின்றனர் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News