வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிம்பு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முதல் நபர்.. எதிர்பார்ப்பை கிளப்பிய பிக்பாஸ் ஓடிடி

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரத்தின் தொடக்க நாளன்று அடுத்த வாரம் வெளியேறும் நபர் யார் என்பதற்கான நாமினேஷன் லிஸ்ட் ரெடியாகும்.

அந்தவகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் தாமரைச்செல்வி, ஜூலி, அபிராமி, சினேகன், அனிதா, தாடி பாலாஜி, சுருதி ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தாடி பாலாஜி இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் இவர் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கை முழு ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் செய்ய முன் வருவதாக தெரியவில்லை. ஆகையால் சுவாரஸ்யம் குறைந்த நபராக ரசிகர்களின் பார்வையில் தாடி பாலாஜி தெரிவதால் மக்களிடமிருந்து குறைந்த வாக்குகளைப் பெற்று அவரே அடுத்து எலிமினேட் ஆக போகிறார்.

இதற்கிடையில் அபிராமியும், தாடி பாலாஜி உடன் டேஞ்சர் ஜூனில் உள்ளார். ஏனென்றால் அபிராமி பொதுவாக எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் போலியாக பிக் பாஸ் வீட்டில் சுற்றித் திரிவதாக ரசிகர்களுக்கு தோன்றுகிறது.

ஆகையால்ட இந்த நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஏழு பேருக்கும் இந்த வார இறுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்கும் என்பதையும் யார் வெளியே போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

சிம்பு வந்து முதல் முறையாக நாமினேஷன் வெளியேறப் போவது இவர்தான். எது எப்படியோ அவர் உள்ளே இருப்பதை விட வெளியிலேயே இருந்து விடலாம் என்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

Trending News