செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

பிக்பாஸ் அமீரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.. மனுஷன் வெளியில தான் இவ்வளவு ஜாலியா!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக களமிறங்கிய அமீர், தற்போது அபிஷேகத்திற்கு மேலாகவே கண்டெண்ட் கொடுத்து வருகிறார், ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் கால் எடுத்து வைத்த உடனே பாவனி மற்றும் அபினை இருவருக்கும் இடையே இருப்பது என்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காண்பித்தவர்.

அத்துடன் அபிஷேக் மற்றும் பிரியங்கா இருவரை குறித்தும் துணிச்சலான கருத்துகளை பதிவிட்டு, பிக்பாஸ் வீட்டில் நச்சு நச்சுனு பேசி ரசிகர்களை சீக்கிரமாகவே தன்வசப்படுத்தினார். அதன்பிறகு தற்போது பவானிக்கு ரூட்டு விடும் அமீர் தற்போது பிக்பாஸ் வீட்டில் காதல் ட்ராக் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்திய அமீர், கடந்து வந்த கஷ்டமான பாதைகளை குறித்து சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் பரபரப்புடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் ஊட்டியில் பிறந்த அமீர், தன்னுடைய ஒரு வயதில் தந்தையை இழந்தது, பிறகு பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவருடைய தாயையும் யாரோ கொலை செய்து விட்டனர். அதன் பிறகு அமீரும் அவருடைய அண்ணனும் ஒரு சிறிய ஆசிரமத்தில் தான் வளர்ந்து வந்தனர்.

பிறகு அமீர் தன்னுடைய நடன திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சினிமாவில் மேலும் பிரபலமடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அமீர் மற்றும் அபினை இருவரும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஆகையால் ஒருவேளை அமீர் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறி விடுவாரோ? என்ற பயத்தில் அவருடைய ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். மேலும் சிறுவயதிலிருந்து கஷ்டத்தை சந்தித்த அமீர் பிக்பாஸ் வீட்டில் கடைசி நாள்வரை இருந்து வெற்றி பெற வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Advertisement Amazon Prime Banner

Trending News