திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெளிப்பட்டது அண்ணாச்சியின் வில்லத்தனம்.. ஆடிப்போன அபிஷேக்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திற்கான தலைவர் போட்டி நடைபெற்றது. இதில் பிக்பாஸ் வீட்டில் இதுவரை விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடித்த இசைவாணி, சிபி, ராஜு, பவானி ரெட்டி இவர்களுடன் பிக்பாஸ் வீட்டில் சென்ற வாரம் ஜொலித்த நபரான இமான் அண்ணாச்சியும் போட்டியிட்டார்.

அதாவது உறைந்த நிலையில் இருக்கும் போட்டியாளர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் மற்ற போட்டியாளர்கள் தொந்தரவு செய்வது தான் தலைவர் போட்டிக்கான டாஸ்க். இந்தக் டாஸ்கில் இமான் அண்ணாச்சி முதல் ஆளாக தோற்றுவிட்டார். அதன் பிறகு இசை வாணியை, அபிஷேக் அழ வைக்க முயற்சிக்கும் போது இமான் அண்ணாச்சி நடுவில் வந்து, ‘இப்படி எல்லாம் பேசக்கூடாது’ என்று வாதிட்டு சண்டையிட்டார்.

அதனால் சிறிது நேரம் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு இமான் அண்ணாச்சி வீட்டிற்குள் சென்று சக போட்டியாளர்களிடம் நானும் சும்மாதான் நடிக்கிறேன். அவர்களை ஏமாற்ற வேண்டுமென்பதற்காக கோபப்பட்டேன் என்று சொன்னவுடன் இமான் அண்ணாச்சியின் வில்லத்தனதை வெளிப்படுத்தியது.

இதைப்பார்த்த மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதன் பிறகு அண்ணாச்சியுடன் சேர்ந்த மற்ற போட்டியாளர்களும் தீவிரமாக சண்டையிட்டனர். அதைப்பார்த்த இசைவாணி சோகம் அடைந்தார்.

bb5-imman-cinemapettai
bb5-imman-cinemapettai

அதுவும் ஒரு உணர்ச்சியில் சேர்ந்ததால் தலைவர் போட்டியிலிருந்து இசைவாணி நீக்கப்பட்டார். இமான் அண்ணாச்சி இசைவாணியை காலி பண்ண போட்ட பிளான் சக போட்டியாளர்களை போன்றே ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஏனென்றால் அபிஷேக்கும் இமான் அண்ணாச்சியின் சண்டையிட்ட ப்ரோமோ பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் இன்று பிக் பாஸ் வீட்டில் அடிதடி சண்டை நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

Trending News