செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரெண்டு வாரம் தான் முடிச்சு அனுப்பிச்சுரனும்.. சிரிச்சிக்கிட்டே ஸ்கெட்ச் போடும் விஷப்பூச்சி பாவனி

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லுக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து சிவப்பு மற்றும் நீல நிற செய்தி வாசிக்கும் சேனல்கள் போல் பிக்பாஸ் வீட்டில் இதுவரை மக்கள் அறிந்திராத உண்மையை ஒவ்வொன்றாக வெளி காட்டுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டின் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்த டான்ஸ் மாஸ்டர் அமீர், விஷப்பூச்சி பாவனியுடன் நெருங்கிய நண்பனாக பழகி கொண்டிருக்கிறார்.

ஆனால் பாவனியோ அமீரை இரண்டே வாரத்தில் சோழிய முடிச்சு அனுப்பிச்சு வேண்டும் என்று நக்கலாக விஷம தனத்துடன் பேசியுள்ளார். இந்த விஷயத்தை பிக்பாஸ் ரசிகர்களுக்கு இதனை நேற்றைய நிகழ்ச்சியில் செய்தி வாசிக்கும் போது வெட்ட வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டனர்.

ஏற்கனவே பாவனியுடன் கூட்டு சேர்ந்த போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமீருக்கும் அந்த நிலைமை வந்துவிடுமோ என்று பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து கிண்டல் அடிக்கின்றனர்.

ஆனால் இந்த விஷயத்தை அமீர் ஜாலியாகவே எடுத்துக்கொண்டார். ஏற்கனவே பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் அக்கா தம்பி என்று சொல்லிக்கொண்டு செய்கிற அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை.

தற்போது பாவனி அமீர் இருவரும் அவர்களைப் போன்றே அட்டகாசம் செய்ய பிளான் போடுகிறார்களோ என்ற சந்தேகம் பிக் பாஸ் வீட்டில் எழுந்துள்ளது.

Trending News