வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் வீட்டில் காணாமல் போன பிரபலம்.. இன்னும் தூக்கமா வைத்திருக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் போட்டியாளராக களமிறங்கியுள்ள ஐக்கி பெர்ரியின் உண்மையான பெயர் ஐக்கியா. மருத்துவரான இவர் இசையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதனை வெளிப்படுத்தும் வகையில் கானா பாடல் போலவே கொஞ்சம் வித்தியாசமாக வேகமாக பாடக்கூடிய ராப் எனப்படும் பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார். அத்துடன் தமிழகத்தில் ராப் பாடும் முதல் பெண்மணியாக இவர் பெயர் இடம்பிடித்துள்ளது.

சமீபத்தில் இவரின் குறலில் பதிவாகியுள்ள பாடல், ப்ரைடு ஆப் லவ் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒளித்து, இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது. மேலும் இவர் இசை சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்தினால், மருத்துவ வேலையில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதால் அவ்வப்போது மட்டும் இசை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மருத்துவ துறையில் பணி புரிவதே முக்கிய வேலையாக கொண்டவர்.

ஏழை எளிய மக்களுக்கு தனது மருத்துவத்துறை சார்ந்த சிறு சிறு உதவிகளை செய்தும், சிறப்பான முறையில் சமூக சேவையும் செய்து வருகிறார். அத்துடன் தஞ்சாவூரை சேர்ந்த இவர், அவ்வப்போது அங்கு இருக்கக்கூடிய ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பித்தும் வருகிறார்.

iykki-berry-cinemapettai

இவ்வாறாக வாழ்ந்துவந்த ஐக்கி பெர்ரி பிக்பாஸ் சீசன்5  நிகழ்ச்சியில்  போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவரின் குரல் ஒலிக்கவில்லை. இது இவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இவர் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அவ்வப்போது அபிஷேக்கை போலவும், சென்ற சீசனில் வந்த வனிதா விஜயகுமார் போலவும் நடந்தாக வேண்டும். இவரின் இருப்பினை பதிவு செய்ய தவறி விட்டால் விரைவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

அதனால் ஐக்கி பெர்ரி இனியாவது தனது குரலை பிக்பாஸ் வீட்டிலும் ஒலிக்கச் செய்ய வேண்டும். ராஜு, இமான் அண்ணாச்சி போன்றும் ஐக்கி பெர்ரி அவ்வபோது ராப் பாடல்களைப் பாடி சக போட்டியாளர்களையும் ரசிகர்களையும் என்டர்டைன்மென்ட் செய்யவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு,

Trending News