செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கோல்டன் டிக்கெட்டை தட்டிப்பறிக்கும் போட்டியாளர்.. பிக்பாஸில் எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பைனல் போட்டிக்கு செல்வதற்கான கோல்டன் டிக்கெட்டை பெறுவதற்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த வாரம் ஆரம்பத்திலிருந்து அந்த டிக்கெட்டுக்காக பல போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் முதல் ஆளாக நிரூப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு அடுத்த போட்டியான முட்டை டாஸ்க்கில் தாமரை மற்றும் பவானி இருவரும் வெளியேறினர்.

மூன்றாவதாக நடத்தப்பட்ட டாஸ்க்கில் பிரியங்கா மற்றும் ராஜூ இருவரும் போட்டியில் இருந்து வெளியேறினார்கள். இந்நிலையில் நேற்று அமீர், சிபி, சஞ்சீவ் ஆகிய மூவருக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தது.

அந்த போட்டியில் போட்டியாளர்களுக்கு பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சரியான விடை அளித்து முன்னேறுபவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி நடந்த போட்டியில் சஞ்சீவ் வெளியேறினார்.

கோல்டன் டிக்கெட்டை பெறுவதற்கான இறுதி கட்டத்துக்கு சிபி மற்றும் அமீர் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மகிழ்ச்சியை பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கொண்டாடினார்கள். இன்று நடைபெற உள்ள இறுதி போட்டியில் கோல்டன் டிக்கெட்டை யார் பெறுவார்கள் என்று தெரியவரும்.

தற்போது இந்த கோல்டன் டிக்கெட்டை வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அமீர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த டிக்கெட்டை யார் வென்றார்கள் என்பதை நடிகர் கமல்ஹாசன் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அறிவிப்பார்.

மேலும் அமீர் இந்த டிக்கெட்டை வெல்லும் பட்சத்தில் பிக்பாஸ் வரலாற்றிலேயே வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டுக்குள் வந்து கோல்டன் டிக்கெட்டை பெற்று பைனலுக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும்.

Trending News