வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ரூ. 10 லட்சத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவரா? ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் ஒரே வாரம் நிறைவடையவுள்ளது. ஆகையால் தற்போதைய பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிரூப், தாமரைச்செல்வி, அமீர், ராஜு, பாவனி, பிரியங்கா, சிபி ஆகிய 7 பேருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக தற்போது பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்வதை விட, யார் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

அதற்கேற்றார்போல் நேற்றைய நிகழ்ச்சியில் ரூ. 3 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நடிகர் சரத்குமார் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டியை கொடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏழு போட்டியாளர்களும் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்.

பிறகு இந்தப் பணத்தின் தொகை அதிகரிக்கும் என்றும் சூசகமாக சரத்குமார் சொல்லி சென்றுவிட்டார். இதனால் அதை எடுக்க யாரும் முன்வரவில்லை. ஆகையால் நாளைக்கும் 3 லட்சம் என்பது 7 லட்சமாக மாறி போட்டியாளர்களின் முடிவை பிக்பாஸ் மாற்ற உள்ளார்.

அத்துடன் நிச்சயம் இந்த பணப்பெட்டியை தாமரைச்செல்வி எடுத்துச் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சஞ்சீவ் இதுகுறித்து விளக்கமாக ராஜுவிடம் சொல்லிச் சென்றுள்ளார். ஒருவேளை சஞ்சீவ் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்திருந்தால் பணப்பெட்டியை அவர் அல்லது நிரூப் அல்லது தாமரைச்செல்வி இவர்களுள் ஒருவர்தான் எடுக்கப் போவதாகவும் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

ஏனென்றால் கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாக்கில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதால் மனமுடைந்த நிரூப்பிடம் கமல் பேசிய பின்பு, நிரூப் பிக் பாஸ் 20 லட்சம் கொடுத்தாலும் நான் அதை எடுக்க மாட்டேன் என்பதை உறுதியாகச் சொன்னார்.

ஆகையால் சஞ்சீவ் எலிமினேட் செய்த காரணத்தினாலும், நிரூப் பெட்டியை எடுக்க மாட்டேன் என்பதை உறுதிப்படுத்தியது மீதமிருக்கும் தாமரைச்செல்வி தான் பணப்பெட்டியை எடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்.

அத்துடன் தாமரைச்செல்வி, இந்த நிகழ்ச்சி யார் ஜெயித்தாலும் எனக்கு சந்தோசம் என்று அடிக்கடி கூறி கொண்டே இருப்பதால், பிறருக்கு விட்டுக் கொடுக்கும் நோக்கத்தில் தாமரைச்செல்வி நிச்சயம்  பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார். எனவே இன்றைய அல்லது நாளைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ. 10 லட்சத்துடன் வெளியேறுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News