புதன்கிழமை, ஜனவரி 15, 2025

14-வது வாரத்தில் 5 லட்சத்துடன் எஸ்கேப் ஆகும் நபர் இவர்தான்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் துவங்கப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இன்னிலையில் கடைசி வாரத்தில் யார் யார் இழக்கப் போகின்றனர் என்ற கணிப்பில் ரசிகர்கள் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.

இதில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் நபருக்கு 5 லட்சம் கொடுக்கப்படும். எனவே 5 லட்சத்துடன் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகின்றனர் என பலர் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமீர் தான் அந்த ஐந்து லட்சதுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆக உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

எனவே 14வது வாரத்தில் அமீர் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இருந்து விலக உள்ளார். போன சீசனில் கேப்ரில்லா இதே போன்று தான் 5 லட்சத்து டன் பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்றார். அதேபோன்று அமீர் இந்த சீசனில் செய்யவுள்ளார்.

சமீபத்தில் கடந்து வந்த பாதை டாஸ்கின் மூலம் அமீர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொல்லிய பிறகு, சோஷியல் மீடியாவில் அவருடைய சோகமான கதையை ஆக்டிவாக பேசப்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் அமீர் தன்னை பிரபல படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து, அதை சிறப்பாக செய்து முடித்த எண்ணத்தில், 5 லட்சம் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.

இருப்பினும் இந்த முடிவு சரியானது என்று சிலர் கணிக்கின்றனர். ஏனென்றால் ராஜு, பிரியங்காவை விட அமீருக்கு குறைந்த ரசிகர்களை இருப்பதால் அவர் வெற்றி பெறுவதற்கு குறைந்த வாய்ப்பு உள்ளது. எனவே மிகத்தெளிவாக அமீர் இந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என சிலர் தெரிவிக்கின்றனர்.

Trending News