திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்களின் உறவினர்கள்.. இணையத்தில் லீக்கான லிஸ்ட்!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இன்னும் நான்கே வாரங்களில் நிறைவடையவுள்ளது. ஆகையால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்களுக்கும் கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டி கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் நடந்து முடிந்த ஒவ்வொரு சீசனிலும், கடைசி சில வாரங்களில் பிரீஸ் டாஸ்க் மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியிலும் வரும் வாரத்தில் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் உறவினர்களின் லிஸ்ட் இணையத்தில் லீக் ஆகி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால் நடக்கவிருக்கும் பிரீஸ் டாஸ்க்கின் போது சிபி அவர்களின் மனைவி பிக்பாஸ் வீட்டிற்கு வர உள்ளார்.

அதேபோல் ராஜுவின் மனைவி அல்லது நண்பரும் வரவுள்ளனர். மேலும் பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரன் வரவுள்ளார். சஞ்சீவ் அவர்களின் மனைவி மற்றும் குழந்தையும் வர உள்ளனர். தாமரையின் மாமியார் பிக்பாஸ் வீட்டிற்கு வர உள்ளார்.

அக்ஷராவின் சகோதரன் மற்றும் பாவனியின் அம்மா மற்றும் சகோதரி வரவுள்ளனர். அதேபோல் வருணின் அம்மா மற்றும் சகோதரன் இல்லையென்றால் வருணின் அப்பா வரவிருக்கிறார். மேலும் அமீரின் நண்பர் ஒருவரும் வரவுள்ளார்.

இவ்வாறு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்களின் உறவினர்களும் வரும் வாரத்தில் வரிசையாக வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளனர். அத்துடன் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் உறவினர்கள் போட்டியாளர்கள் எவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் தெளிவுபடுத்தி விளையாட்டை சூடுபிடிக்க செய்ய உள்ளனர்.

bb5-relative-list-cinemapettai
bb5-relative-list-cinemapettai

Trending News