வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பிக் பாஸினால் கதாநாயகன் வாய்ப்பை தவறவிட்ட பிரபலம்.. பேட்டியில் குமுறும் மனைவி!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு, 50 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக சஞ்சீவ் மற்றும் அமீர் இருவரும் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர். இந்நிலையில் சஞ்சீவ் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய நேர்மையான விளையாட்டை வெளிப்படுத்தினாலும், ஒரு சில வாரங்கள் மட்டுமே அவரால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடிந்தது.

அதன் பிறகு எலிமினேட் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் சஞ்சீவின் மனைவி பேட்டி ஒன்றின் மூலம் சன் டிவியின் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகும் ‘வானத்தைப்போல’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு தமன் குமார் நடிப்பதற்கு முன்பே சஞ்சீவுக்கு கிடைத்ததாகவும், ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே அந்த வாய்ப்பை சஞ்சீவ் ஏற்க மறுத்துவிட்டாராம்.

அதன்பின்பு தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்ரீ நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே ‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ என்ற கதை போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக எதிர்பார்ப்புடன் சென்ற சஞ்சீவுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

அத்துடன் சின்னத்திரையில் ஒரு சில வருடங்களாக எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காமல் தவித்து கொண்டிருந்த சஞ்சீவிற்கு முன்னணி சீரியலில் ஹீரோவாக நடிக்க கிடைத்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டதாக அவருடைய மனைவி ப்ரீத்தி பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான சஞ்சீவ், அதன்பின் திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடையே செல்வம் என்ற பெயரில் இன்றுவரை நீங்காமல் இருந்து கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து சஞ்சீவ் கடைசியாக சன் டிவியின் ‘கண்மணி’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே சஞ்சீவ் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் முன்னேற முடியவில்லை என்று ப்ரீத்தி வருந்துகிறார் .இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இயல்பான நிலையை வெளிக்காட்டிய சஞ்சீவுக்கு இனிவரும் நாட்களில் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வந்து குவியும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News