விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் நூறு நாட்கள் தாண்டி பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடிப்பவர்களே இறுதி போட்டிக்கு செல்வார்கள். இறுதியில் வெற்றி பெறும் ஒரு நபருக்கு பிக்பாஸ் ட்ராஃபி மற்றும் 50 லட்சம் பணம் பரிசாக தரப்படுகிறது.
அவ்வாறு இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் விஜய் டிவியில் இருந்து வந்த பிரியங்கா, ராஜு, பாவனி, சன் டிவியில் இருந்து வந்த அண்ணாச்சி மற்றும் பாடகி சின்னப்பொண்ணு ஆகியோர் மட்டுமே பரிச்சயமான முகங்களாக இருந்தது.
அதன்பிறகு வையல்காட் என்ட்ரியாக நடன இயக்குனர் அமீர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ், கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் கோரியோகிராபராக அமீர் பணியாற்றி இருந்தார்.
அமீரை தொடர்ந்து விஜய்யின் நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் வையல்காட் என்ட்ரியாக வந்தார். மக்களுக்கு அமீரை விட சஞ்சீவ் மிகவும் பரிச்சயமானவர். ஆனால் இரண்டு வாரங்களிலேயே சஞ்சீவ் எலிமினேட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அமீருக்கு ஃபைனலுக்கு போகும் டிக்கெட் கிடைத்தது.
சிபி சாதுர்யமாக 12 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தாமரைக்கு வெளியில் நல்ல பேர் இருந்தாலும் இறுதிப் போட்டிக்கு முதல் வாரம் எலிமினேட் ஆனார். பல அவமானங்கள் உடன் இறுதிப்போட்டிக்கு செலக்ட் ஆன நீருப்புக்கு 5வது இடம் கிடைத்தது.
கடைசியில் விஜய் டிவி நினைத்தபடி அவர்கள் தொலைக்காட்சியில் இருந்து வந்த நால்வரும் இறுதிப்போட்டிக்கு சென்றனர். பிரியங்காவை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் ரசிகர்களின் மனதை வென்ற ராஜுவை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தனர்.